தமிழ்நாட்டில் இயங்கும் மினி பேருந்துகளில், முதல் 2 கி.மீ வரையிலான கட்டணம் ரூ. 4 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இப்புதிய கட்டணமானது, வரும் மே. 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மினி பஸ் கட்டணம் மாற்றம்:


தமிழ்நாட்டில் குறைந்த தூர பயணத்திற்கு , மக்கள் பெரும்பாலும்  மினி பஸ் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவது வழக்கம். மினி பஸ்ஸானது, இதர பேருந்துகளை போல அல்லாமல், சிறிய சாலைகளை இணைக்கும் வகையிலும், மற்ற பேருந்துகள் செல்லாத பகுதிகளிலும் செல்லக்கூடியவையாக இருக்கிறது. மேலும், இந்த பேருந்துகள், பேருந்துகள் நிறுத்தத்தில் மட்டுமல்லாமல், விரும்பிய இடத்தில் ஏறும் வகையிலும், இறங்கும் வகையிலும் செயல்படும். இதனால், மக்கள் பலரும் , குறைந்த தூர பயணத்திற்கு மினி பஸ்ஸில் , அதிகம் பயணம் செய்கின்றனர்.


Also Read: Modi-Trump: மை டியர் பிரண்டு.! அமரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசிய பிரதமர் மோடி..


புதிய மின் கட்டணம் :


இந்நிலையில், மினி பஸ்ஸுக்கு உரிய கட்டணத்தை, மாற்றி அமைத்து , தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் 4 கி.மீ வரை ரூ. 4 கட்டணமாகவும், 4 கி.மீ முதல் 6 கி.மீ வரை ரூ. 5 கட்டணமாகவும் , 6 கி.மீ முதல் 8 கி.மீ வரை ரூ. 6 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டணமானது, வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.