சென்னை (Chennai News): சென்னை ஒட்டியுள்ள கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜேசிகரின் நகர் எட்டாவது தெருவில் வசித்து வருபவர் சிவலிங்கம் (வயது 66) மற்றும் அவரது மனைவி ராணி (வயது 55). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் முதல் மகன் காஞ்சிபுரத்தில் தொழில் செய்து வருகிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்கள்  கண்டிகை மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில்  காய்கறி, பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். மகன்கள் மூவரும் மனைவி குழந்தைகளுடன் மூன்று அடுக்கு, 4 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு நல்ல நிலைமையில் வாழ்ந்து வரும் நிலையில்  தன் தாய், தந்தையை யாரும் கவனிக்காமல் அவர்களின் சொத்துக்களை பிரித்து வாங்கிக் கொண்டு வெளியே அனுப்பியுள்ளனர்.


சொத்துக்களை மூன்று பிள்ளைகளுக்கும்


இதில் தற்கொலை செய்து கொண்ட முதியவர் சிவலிங்கம் மற்றும் அவரது மனைவி ராணி ஆகிய இருவரும்  ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் அவர்களிடம் இருந்த சொத்துக்களை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்து விட்டு தற்போது பிள்ளைகள் இருக்கும் அதே இடத்தின் அருகில் குடிசை வீட்டில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி அவர்களுக்கு உண்டான சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளனர். ஆனால் பிள்ளைகளோ பெற்றோரை கவனிக்காமல் விட்டதால்,  கணவன், மனைவி இருவருக்கும் நீரழிவு குறைபாட்டால், நாளடைவில் மனைவி ராணிக்கு ஒரு கால் பாதம் அழுகி நோய்வாய் பட்டு அவதி பட்டனர்.


ராணி பூச்சி மருந்து சாப்பிட்டு 


இந்நிலையில், முதியவர் சிவலிங்கம் தங்கி இருந்த குடிசை வீட்டில் நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை எழுந்து பார்த்த மனைவி, கணவன் தூக்கில் தொங்கியதை கண்டது அதிர்ச்சி அடைந்த நிலையில், பின்னர், பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் முதியவர்கள் வெளியே வராததால் வீட்டருகே சென்று பார்த்தபோது இருவரும் தற்கொலை செய்து கொண்டு இருந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.'


விசாரணை


இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பத் இடத்திற்குச் சென்ற காவல்துறை சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று முதியவர்களின் இறப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது பிள்ளைகளும் தன் மனைவி குழந்தைகளை மட்டும் கவனித்து வருகின்றனர். தாய் தந்தையிடம் உள்ள சொத்துக்களை பிடுங்கிக் கொண்ட பிள்ளைகள் பெற்றோர்களை கவனிப்பதை மறந்து விடுகின்றனர்.




Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)