சென்னையில் அவ்வப்போது பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் வரும் 6ம் தேதி ( சனிக்கிழமை) மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு, மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு மெட்ரோ ரயில்களை இயக்குகிறது. இதுதொடர்பாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 


அதிகாலை 3 மணி முதல் ரயில்:


" சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற 06.01.2024 மெட்ரோ இரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும். சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகள், வருகின்ற (06.01.2024) அன்று அதிகாலை  3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.


மாரத்தான் ஓட்டம்:


மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ இரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம். வழக்கமான மெட்ரோ இரயில் சேவைகள் காலை 5.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விசேஷ காலங்கள், கிரிக்கெட் போட்டிகள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட நாட்களில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்படுவது வழக்கம். இந்த அடிப்படையில் மராத்தான் போட்டியை முன்னிட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க: EPS Statement: ”பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கிடுக; கரும்பு நேரடி கொள்முதல்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!


மேலும் படிக்க:Jallikattu 2024 Date: ஓரம்போ... ஓரம்போ... வருகிறது ஜல்லிக்கட்டு போட்டி - எங்கே? எப்போது? தேதிகள் அறிவிப்பு