உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறை மூலமாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சாதி பெயரை குறிப்பிடக் கூடாது


முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுதி மொழி ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் ஆணை இட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


பாரம்பரிய வீர விளையாட்டு


அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழர்களின் இன்றியமையாத பண்டிகையாக அவர்களின் வாழ்வில் கலந்துள்ளது. பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து புது பானை வைத்து பொங்கல் பொங்கி சொந்த பந்தங்களுடன் கொண்டாடி மகிழ்வதே ஒரு தனி சுகம் என்றே சொல்லலாம். 

ஜல்லிக்கட்டுப் போட்டி  பொங்கல் பண்டிகையின் மணிமகுடம் என்றே சொல்லலாம். பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக விளையாடப்படும் மிகவும் பாரம்பரியமான மற்றும் ஆரவாரமான விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு முக்கியமான ஒன்று ஆகும். ஜல்லிக்கட்டு இன்று நேற்று தோன்றியதல்ல மிகவும் பழமையானது. 



நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் கிராமத்தில் மக்கள் காளைகளை துரத்தும் காட்சிகள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான கல் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டியில் 1500 ஆண்டுகள் பழமையான கல் பலகை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற குறிப்புகளே ஜல்லிக்கட்டுப் போட்டி மிகவும் பழமையான வீர ளையாட்டு என்பதற்கு சான்றாக விளங்குகிறது. 


மேலும் படிக்க 


O Panneerselvam: பிரதமர் மோடிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி! திணறடிக்கும் ஓபிஎஸ்


Ayodhya Ram Temple: போராட்டம், வன்முறை, உயிரிழப்பு; 500 ஆண்டுகால வரலாறு- அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை!


Chennai Rain: சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய மழை! இன்னும் 4 நாட்கள் - வானிலை மையம் வார்னிங்!