Just In





Chennai Metro Rail: சுற்றுலா பயண அட்டை நிறுத்தம் - சென்னை மெட்ரோ அறிவிப்பு!
Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயிலின் சுற்றுலா அட்டை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலின் ’சுற்றுலா அட்டை’ (Tourist Cards) சேவை பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 'Peak Hours' 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
சுற்றுலா பயண அட்டை நிறுத்தம்:
சென்னை மெட்ரோ நிறுவனம் வழங்கி வரும் சுற்றுலா அட்டை (Tourist Cards) பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிடுள்ள செய்தியில், “ சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை (1-நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலாஅட்டை) பிப்ரவரி 1, 2025 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்து கொள்கிறது.
சென்னை இரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது. சுற்றுலா அட்டைகள் இனி பயன்படுத்தமுடியாது என்றாலும், பயணிகள் தங்கள் பயணத் தேவைகளுக்குடிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், QR குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டுகள், ஒற்றை பயணடோக்கன்கள் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை(National Common Mobility Card) உள்ளிட்ட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம்.
தேசிய பொது போக்குவரத்து அட்டை இப்போது MTC பேருந்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தடையற்றபயண அனுபவத்தை வழங்குகிறது. மெட்ரோ பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்திசெய்வதற்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முழுமுயற்சி எடுத்துவருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
டிக்கெட் சலுகை:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் (+91- 83000 86000 ) மூலமாக டிக்கெட் மற்றும் Paytm App மூலமாகவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.