Watch Video: ஜம்மு -காஷ்மீர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் - சோதனை ஓட்டம் வெற்றி!
Watch Video: ஜம்மு - காஷ்மீர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே துறை வெற்றிகரமாக செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்:
இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்பாராத அளவில் பயணிகளின் ஆதரவு அதிரிகரித்து வருகிறது. அதோடு, ரயில்வே துறையும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் 25-ம் தேதி அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் (Shri Mata Vaishno Devi Katra (SVDK) ) - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, உதாம்பூர் (Shri Mata Vaishno Devi Katra (SVDK) ) ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரை வந்தே பாரத் ரயில் பயணித்தது. உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
வந்தே பாரத் ரயில் - செனாய் பாலம் (Chenab bridge):
உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த செனாப் பாலத்தில் முதல்முறையாக வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் வந்தே பாரத் ரயிலின் சிறப்புகள் என்னென்ன?
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளுக்குள் தட்பவெட்ப நிலையை சீராக வைக்கவும் குளிருக்கு ஏற்றார்போல கதகதப்பான சூழல் இருப்பதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் போல் அல்லாமல் இது ஜம்மு - காஷ்மீர் பகுதிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. பயோ டாய்லட் டேங்கில் உள்ள தண்ணீர் உறைந்துவிடாமல் இருக்கவும் ரயில் ஓட்டுநர் பனிப்பொழிவு காலத்திலும் தெளிவாக புறச்சூழல்களை காண் கண்ணாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டால், வாகனங்களை இயக்க முடியாத சூழல் உண்டாகும். தற்போது, செனாப் பால ரயில்வே திட்டத்தின் மூலம், அவர்களுக்கு மாற்று வழி உருவாகியுள்ளது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் அறிமுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயில்களின் சிறப்பம்சங்கள் சில:
- கவாச் பொருத்தப்பட்டது.
- தீ பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணக்கமான ரயில்.
- ஆற்றல் செயல்திறனுக்கான மீளுருவாக்க பிரேக்கிங் சிஸ்டம்.
- அதிக சராசரி வேகம்.
- அவசர காலங்களில் பயணிகள் - ரயில் மேலாளர் / லோகோ பைலட் இடையேயான தகவல் தொடர்புக்கான அவசர பேச்சு-பேக் யூனிட்.
- ஒவ்வொரு முனையிலும் ஓட்டுநர் பெட்டிகளில் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் (பிஆர்எம்) கொண்ட பயணிகளுக்கான தங்குமிடம், அணுகக்கூடிய கழிப்பறைகள்.
- அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்.
- 2024 டிசம்பர் 02 நிலவரப்படி, 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 16 வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.