நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானமானது மோசமான வானிலையால் தடுமாறிய நிலையில் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க வைத்த கோரிக்கையை அந்நாடு நிராகரித்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

இண்டிகோ விமானம்: 

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 227 பயணிகளுடன் ஸ்ரீ நகரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. பலத்த காற்று மற்றும் மழையினால் விமானமானது டர்புலன்ஸ்சில் சிக்கியது, மேலும் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையின் காரணமாக விமானத்தில் முன் பகுதி சேதமடைந்தது. இதனால் விமானி உடனடியாக ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மறுத்த பாக்:

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 220 மேற்ப்பட்ட பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் மோசமான வானிலையை இந்த விமானம் எதிர்க்கொண்டது. மேலும் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் விமானி உடனடியாக ஸ்ரீ நகர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர நிலை குறித்து தெரிவித்தார். 

அதற்கு முன்பாக விமானம் ஆனது அமிர்தரசஸ் வான்வெளியில் பறந்துக்கொண்டு இருந்தது அப்போது விமானம் டர்புலன்ஸ்சால் தடுமாற தொடங்கியது, இதனை கவனித்த விமானி பாகிஸ்தானின் லாகூர் வான்வெளி வழியாக செல்ல அனுமதிக்குமாறு லாகூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் அவசர நிலைமையை எடுத்துரைத்து அனுமதிக்கேட்டுள்ளார். ஆனால் பாக் விமான நிலைய கட்டுப்பாட்டு வாரியம உடனடியாக இந்த கோரிக்கையை நிராகரித்தது. 

இதனால் விமானமானது அதன் வழக்கமான பாதையிலேயே பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது, இதன் காரணமாக விமானமானது அந்த பாதையில் சென்று கடினமான ஆட்டத்தை எதிர்க்கொண்டது. 

விமானியின் சாதுர்யமான இயக்கத்தால் விமானம் பத்திரமக ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. 

பஹல்காம் தாக்குதல்:

கடந்த மாதம் பஹல்காமில் ஏற்ப்பட்ட தாக்குதலினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. இதனால் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது, மேலும் பாக் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் பாக். வான்வெளியில்,  அவசர நிலை காரணமாக பறக்க அனுமதி கேட்டும் விமானத்தை மோசமான வானிலையில் பறக்க தள்ளப்பட்டது தவறு என்றும் இது மனிதாபிமான அற்ற செயல் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.