காஞ்சிபுரத்தில் மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புள்ள அம்பேத்கார் சிலைக்கு  மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர். அதனையடுத்து அம்பேத்கர்  சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட செய்தி அறிந்து ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன்பு குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 

மேலும் இதுகுறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் கோட்ட டி.எஸ்.பி ஜூலியர் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டு காவி உடை போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்த நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் தொடர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

 



 

மேலும் மின்சார வாரிய அலுவலகம் முன்பு காஞ்சிபுரம்-வேலூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்திலும்  ஈடுபட்டதால் சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர். அதேபோல் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏராளமான போலீசாரும் தொடர்ந்து அங்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

சம்பவ இடத்திற்கு குவிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் மக்கள் மன்றம் அமைப்பினரை சேர்ந்தவர்கள் கண்டன குரல் மற்றும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தைகளும் ஈடுபட்டு வந்தனர். உடனடியாக பதற்றம் ஏற்படாமல் இருக்க இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.



 

இருந்தும் சிறிது நேரம் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைப்பினர் காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து எந்த வீட்டு சம்பவம் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 



Also Read: India 75: இந்தியாவுக்கான கடல்வழி பாதையை காற்றின் உதவியால் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசியர்கள்.. ஒரு தொகுப்பு..


India 75: இந்தியா 75 : ஓவிய கலையில் சிறந்து விளங்கிய இந்திய கலைஞர்கள்..


 


‘க்யூ ஆர்’ மோசடி.. பணம் அனுப்புகிறார்களா உஷார்.. முன்னாள் ஊர்காவல் படை ஊழியர் கைதான பின்னணி..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண