சென்னை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கானத்தூர் பழைய கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த 52 வயதான பரத்துடு என்பவர் தனது குடும்பத்தோடு தங்கி பராமரித்து வந்தார்.


இந்த நிலையில் மனைவியின் நடந்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி பரத்துடு அவரது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பரத்துடு, தனது  48 வயதான மனைவி சுஜாதாவின் கழுத்தை புடவையால் இறுக்கி கொலை செய்துள்ளார்.


பின்னர் தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.


இதேபோல், குன்றத்தூரை அடுத்தகாலடிபேட்டை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் 45 வயதான ரமேஷ். இவருடைய மனைவி அலமேலுக்கு 42 வயதாகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அலமேலுவின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த கடப்பாரையால் அலமேலுவின் தலையில் அடித்துக்கொன்றார். பின்னர் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி , திருவள்ளூர் மாணவி ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிரவைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண