அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.  இதில், சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,சாந்தலிங்க மருதாசல அடிகள்,குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் மற்றும் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.



விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2.10.70-இல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டப் வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது 51 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவையும் கலைஞரின் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பணி நியமன ஆணை பெற்ற 58 பேரில் 24 பேர் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியிகளிலும், 34 பேர் தனியார் அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும், பணியானை பெற்றவர்களில் பட்டியல் பிரிவில் 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6, பிற்படுத்தப்பட்டோர் 12 மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்தவர் 1. தவிர, பெண் ஓதுவார் ஒருவர் பணியாணை பெற்றுள்ளார்.




இதன் மூலம் கோயிலில் குறிப்பிட்ட சாதியியைச் சார்ந்தவர் மட்டுமே அர்ச்சகராக இருந்த வந்தது மட்டுமின்றி கருவறைக்குள் பெண் செல்ல கூடாது என்ற நடைமுறையையும் தகர்த்தெறியப்பட்டுள்ளது.பெண் ஓதுவராக பணியானை பெற்றுள்ள சுஹாஞ்சானவிற்கு 27 வயதாகிறது. இவர் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே  மாடம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை கோயிலில் ஓதுவாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதுகுறித்து சுஹாஞ்சனா கூறுகையில், தனக்கு ஓதுவார் பணி கிடைத்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பெண்கள் தாமாக விருப்பபட்டு முன்வந்து ஓதுவார் குறித்து படித்து தெரிந்து கொண்டு அவர்கள் அனைவரும் பயன்பெற வேண்டும். இவ்வாறு பெண்கள் பயிற்சி பெற்ற அவர்களின் குழந்தைகள் பக்தி நெறி வளர்வதற்கு இவை உதவும். தனக்கு வாய்ப்பளித்த தமிழக அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகள் படிங்க அன்று பாம்பே வரை ஏற்றுமதியான கருங்குழி வெற்றிலை..! காய்ந்து காணாமல் போன கதை என்ன ?


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X