சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமான கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். சோழர் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியால், சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள்  பாசன வசதி பெறுகிறது. இதனால் இந்த ஏரியானது சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியமான பாசன நீர் ஆதாரமாக உள்ளது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகர மக்களுக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது அவர்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகித்து வருகிறது. 



மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. திறந்து விடப்பட்ட இந்த தண்ணீரானது  கல்லணையை வந்தடைந்தது இதற்குப் பின் பாசனத்திற்காக கொள்ளிடம் தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பின்னர் தொடர்ந்து இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.


 


இதன்காரணமாக வீராணம் ஏரியில் நீர் வரத்து அதிகம் ஆனது இதைத்தொடர்ந்து 15.60 அடியாக இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 41.10 கன அடியாக உயர்ந்தது. ஏரியின் நீர்மட்டம் 40 கள அடியை எட்டிய உடன் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் அதன்படி ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியை எட்டியதால் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து நேற்று காலை முதல் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டுவருகிறது. கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரிக்கும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஏரியில் மராமத்து பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 6 மாதங்களுக்கு பிறகு சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்புவதால் சென்னையின் குடிநீர் தட்டுப்பாடுகள் நிலவும் பல்வேறு பகுதிகளில் சற்றே குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 


ஆனாலும் வெகு நாட்களுக்கு பிறகு ஏரிக்கு நீர்வரத்து அதிகரத்துள்ளது தங்களுக்கு ஆதரவாகவும் மகிழ்ச்சியும் அளிப்பதாக ஏரியை சுற்றியுள்ள விவசாய பெருமக்கள் மதிழ்ச்சி தெரிவித்தனர். ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயம் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது எனவும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.