செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி உறைவிட மருத்துவராக பணிபுரிந்த தீனதயாளன் என்பவர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தன்னை  பணியிட மாற்றம் செய்ததாகக் கூறி, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ.ஆர்.எம்.ஓ. எனப்படும் உதவி உறைவிட மருத்துவராக தீனதயாளன் என்பவர் பணியாற்றி வந்தார். சிறிது காலத்திற்கு முன்னதாக இவரை பொறுப்பு ஆர்.எம்.ஓ அலுவலராக பணியமர்த்தியுள்ளனர்.


Crime : பாலியல் தொழிலுக்கு காதலியை தள்ளிய பெண்கள்.. துண்டுதுண்டாய் வெட்டுனேன்.. கொலையாளி பகீர் வாக்குமூலம்


இந்நிலையில், தீனதயாளன்   வெளியிட்ட காணொலியில், அவர் பொறுப்பிற்கு வந்த பிறகு மருத்துவமனையில் நடைபெறும் சில ஊழல்களையும், பாலியல் சீணடல்களையும் தட்டிக் கேட்டதாகக் கூறுகிறார். சில மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பாலியல் அத்துமீறல், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகக் கூறுகிறார்.


இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலர் ஆகியோருக்கு வாட்ஸ்-அப் மூலமாக ஆதாரங்களுடன் தகவல் அனுப்பியதாகவும் தெரிவிக்கிறார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆதாரங்களை எடுத்துக்கொண்டு அமைச்சரை நேரில் சந்திக்க சென்றபோது, அமைச்சர் மா.சுப்ரமணியம் தன்னை செங்கல்பட்டில் இருந்து சேலத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிட்டதாகவும் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.


 



அதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 25 தொழிலாளர்கள் தங்களது குறைகளைஅமைச்சரிடம் தெரிவிக்க சென்ற நிலையில், அவர்களையும் அமைச்சர் பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். மேற்கண்ட குற்றச்சாட்டுகளை காணொலியில் பதிவிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீனதயாளன் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவர் தீனதயாளன் சேலம் மருத்துவமனையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளைப் படிக்க..


அம்மனின் 10 பவுன் தாலி சங்கிலி திருட்டு... ஆடி மாதத்தில் பரபரப்புக் கிளப்ப திட்டமிட்டு திருடிய நபர்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர