மைசூரில் 3 பெண்களை கொலை செய்து அவர்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய சைக்கோ கொலைகாரனை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 


கடந்த ஜுன் மாதம் மைசூர் அருகே உள்ளே கால்வாய் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. சரியாக அங்கிருந்து 25 கிலோ மீட்டரில் உள்ள அரக்கேரே என்னும் இடத்தில் உள்ள கால்வாயிலும் ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


இதையடுத்து, கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் மாயமாகி கண்டுபிடிக்க இயலாத பெண்கள் 1,116 பேர்களில் 2 பேர் உடல்தான் இது என்று காவல்துறையினர் கண்டறிந்தனர். மே மாதத்திலும் இதேபோல் சம்பவம் அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 


வழக்கின் தீவிரத்தை அறிந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன் சிக்னல்கள் மூலம் முதற்கட்ட விசாரணை தொடங்கியது. சம்பவத்தன்று குறிப்பிட்ட செல்போனின் சிக்னல் மட்டும் மைசூரில் இருந்து மாண்டியாவுக்கு சென்று மீண்டும் அங்கிருந்து மைசூரு சென்றதை கண்டறிந்தனர்.




அந்த செல்போனுக்கு சொந்தக்காரர் பெங்களூரை சேர்ந்த சித்தலிங்கப்பா என்பதை அறிந்தனர். மேலும்,  பெண்களிடம் நெருங்கிப்பழகும் குணம் கொண்ட சித்தலிங்கப்பா பல பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.


அந்தவகையில் சாம்ராஜ் நகரை சேர்ந்த பாலியல் தொழிலாளியான சந்திரகலாவுடன் நெருக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் பாலியல் தொழிலில் சந்திரகலா தள்ளப்பட காரணமாக இருந்த பெண்கள் குறித்து சித்தலிங்கப்பாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனதில் பகை வளர்த்து கொண்ட சித்தலிங்கப்பா அதற்கு காரணமான பெண்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 


மேலும் படிக்க : ”என் நம்பிக்கையை காப்பாற்றியவர்... அவர் இயக்குநரை நம்புறவர் “ - மாறி மாறி புகழ்ந்த தனுஷ், வெற்றிமாறன்!


இதற்காக சித்தலிங்கப்பாவுக்கு மைசூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து சந்திரகலா கொடுத்துள்ளார். இருவரின் திட்டப்படி சம்பந்தப்பட்ட பெண்களை சித்தலிங்கப்பாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களும் பலமுறை வீட்டிற்கு வந்து சித்தலிங்கப்பாவை சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.  அதன் பிறகு சித்தலிங்கப்பா மூன்று பெண்களை கொலை செய்துள்ளார். 


கிட்டத்தட்ட 2 மாதங்கள், 9 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் இந்த சீரியல் கில்லர் சித்தலிங்கப்பாவை கைது செய்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண