சென்னை கத்திப்பாரா அருகே ராட்சத வழிகாட்டி பலகை கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். சாலையோரத்தில் இருந்த வழிகாட்டி பலகை திடீரென சாலையில் சரிந்துவிழந்ததில் சாலையில் பைக்கில் சென்ற நபர் படுகாயம் அடைந்தார். பேருந்து ஒன்றும் பலமாக சேதமடைந்தது. இதில் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தால் கத்திப்பாரா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடனேயே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் நடுரோட்டில்கிடந்த பலகையை கிரேன் உதவியுடன் நகர்த்தி சாலையை போக்குவரத்தை சரி செய்தனர்.
இது குறித்து தெரிவித்துள்ள போக்குவரத்து காவலர்கள்,'' மாநகரப்பேருந்து மோதிய வேகத்தில்தான் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்தது. இரு புறம் சாலையில் செல்லும் வாகனங்களும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டன என்றனர்.
முன்னதாக சென்னையில் 2019ம் ஆண்டு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார். துரைப்பாக்கம்-பல்லாவரம் சாலையில் அப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸை வரவேற்று வைக்கப்பட்ட டிஜிட்டர்பேனர் சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்பவர் மீது விழுந்தது. சரியாக கட்டப்படாத அந்த பேனர் விழுந்ததில் தடுமாறி விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் சுபஸ்ரீ உயிரிழந்தார்.சிசிடிவியில் பதிவான இந்தக்காட்சி அப்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்