அருங்குன்றம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் முதல்வர் போல் ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவராக சிறுவர்கள் பதவி ஏற்ற ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி. நேத்ரா, ஸ்ரீ பிரியதர்ஷினி மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் அடிக்கல் நாட்டினார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாமதி அடுத்த அருங்குன்றம் ஊராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு நாள் முதல்வர் என்பது போல் ஒரு நாள் புரட்சி மன்ற தலைவர் பதவி அளிப்பதாக பள்ளி சிறுவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் கூறியிருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மிக ஆர்வமுடன் போட்டி போட்டு படித்து வந்தனர். இதில் ஐந்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி நேத்ரா ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், இரண்டாம் மதிப்பெண் எடுத்த செல்வி ஸ்ரீ பிரியதர்ஷினி ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் பதவி ஏற்கப்பட்டு இன்று ஒரு நாள் முழுவதும் ஊராட்சி மன்ற அலுவலக இருக்கையில் அமைப்பு அமர வைத்து பள்ளி சிறுவர்களை ஊக்குவித்தனர்.
முன்னதாக குடியரசு தின விழாவை ஒட்டி அப்பகுதி ஊர் பொதுமக்கள் உடன் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து பள்ளி சிறுவர்களை வரவேற்பு கொடுத்து பள்ளியிலிருந்து அழைத்து வந்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் அமைக்கப்பட்ட தேசத் தலைவர்களுக்கு பூமாலை தூவி குற்று விலகேற்றிவைத்தனர். பின்னர் பதவியில் அமர வைத்த சால்வை அணிவித்து தலைவர் செல்வி.நேத்ரா மற்றும் துணை தலைவர் செல்வி ஸ்ரீ பிரியதர்ஷினி ஆகிய இருவரையும் அமரவைத்தனர், பின்னர் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மக்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒரு நாள் ஊராட்சி மன்ற தலைவராக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி அலுவலகத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியினை ஏற்றி தேசியத் தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர். குறிப்பாக பள்ளி சிறுவர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு இயற்க்கை உணவான கள்ள உருண்டை மற்றும் பேரிச்சம்பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க இனிப்புகளை வழங்கினர். இறுதியில் அப்பகுதியில் 40 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள் இன்று ஒரு நாளில் பதவியேற்ற பின் தேசியக் கொடியேற்றுவதிலிருந்து அன்று மாலை வரை நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் இவர்தலைவராகவே செயல்படஇருப்பதால் ஊராட்சி பொதுமக்கள் ஆவலுடன் கலந்து கொண்டனர்.