செம்பரம்பாக்கம் ஏரி
ஏரி நிலவரம்
மாண்ட்ஸ் புயலின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது, குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 2046 கன அடி. ஏரியின் நீர்மட்டம் 22.65 அடியை எட்டியுள்ளது. 240 கனஅடியாக நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் காலை 1000 கன அடி நீர் வெளியேறிய நிலையில் 12 மணியளவில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று மாலை 4:30 மணி அளவில் கூடுதலாக 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. ஆகமொத்தம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கனஅடி நீர் வெளியேற உள்ளது.
காரணம் ஏன் ?
ஏரியின் நீர்மட்டம் 23 அடி உள்ளாகவே, இருக்க வேண்டுமென்பதற்காக இம்முறை நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமில்லாமல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர் மழை எதிரொலியாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
வானிலை மையம் கொடுத்த அப்டேட் இதுதான்..!
. மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக, இன்று 11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.