ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் மணலூர் பேட்டையை சேர்ந்த சு.செல்வம் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஓவியர் செல்வம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பென்சில் அழிக்கும் ரப்பரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிற்பத்தை 2 மணி நேரத்தில் கத்தி மற்றும் ஊசி கொண்டு செதுக்கி பின்னர் வண்ணம் தீட்டி அசத்தியுள்ளார்.




மேலும், இது குறித்து ஓவியர் செல்வம் நம்மிடம் பேசியபோது, ஓவிய ஆசிரியராக பணியாற்றும் எனக்கு சமூக அக்கறையும் உள்ளது. அதனால் என்னுடைய ஓவியங்களை கருவியாக பயன்படுத்தி சமூகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறேன். தாடியில் அப்துல்கலாம், நாற்றில் பாரதி, சாக்பீசில் அம்பேத்கர் என தலைவர்களின் உருவகங்களில் ஓவியமாக மாற்றியுள்ளேன். சோப்பில் படம் வரைதல், பாட்டிலில் படம் வரைதல் நாணயங்களை பயன்படுத்தி படம் வரைதல், மணல் சிற்பங்கள் என பலவற்றில் ஓவியம் செய்துள்ளேன்.


இந்நிலையில், பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் தனது முயற்சியை முன்னெடுத்துள்ளார் ஓவிய ஆசிரியர் செல்வம். அந்த வகையில், செல்வம் தனது கையில் துணிகளை சுற்றி கொண்டு அதன்மேல் தீ வைத்துக் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை ஓவியமாக வரைந்துள்ளார். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஓவிய ஆசிரியர் செல்வத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.



கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்பதை தெரிவிக்கும் வகையில் முட்டிபோட்டு ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் அதற்கு என்ன பாதுகாப்பு வழிமுறை என்பதை உள்ளங்கையில் வரைந்து சாதனை செய்துள்ளார்.  கலாம் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் வேல்ட் ரெக்கார்ட், சோழன் உலக சாதனை என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.


சின்ன கலைவாணர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மரங்கள் நட வேண்டும் என்ற நோக்கதிலும் பச்சை நிற கேசரி பவுடர், மற்றும் காபி தூள் பயன்படுத்தி கலவையாக என்னுடைய வாயில் எடுத்து கொண்டு அதனை உமிழ்ந்து மரம் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.



இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது . ஒவ்வொரு தனி மனிதனும் மரம் வளர்க்க ஆரம்பித்துவிட்டால் கலாம், விவேக் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியதாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார். இது போன்ற பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துவருக்கிறார் ஓவிய ஆசிரியர் செல்வம்.


 


Food Story: கலைஞருக்கு அல்வா கொடுத்த சீர்காழி!