காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் என்ற பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மர்ம நபரை காவல்துறையினர்,  சோதனை செய்ததில், கைத்துப்பாக்கியின் 3 தோட்டாக்கள் மற்றும் அவற்றை லோடு செய்ய பயன்படுத்தும் 3 ஹேன்டில்கள் பறிமுதல் செய்தனர்.

 

வாகன சோதனையில்

 


காஞ்சிபுரம்  ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு என்ற பகுதியில்  நேற்று முன்தினம் நள்ளிரவு காவல்துறையினர் வழக்கமான  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேக நிலையில் நடந்து வந்த இளைஞர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இளைஞரிடம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதலில் அந்த இளைஞரிடம் காவல்துறையினர் சாதாரணமாகவே, விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வந்துள்ளார்.

 

3 கைத்துப்பாக்கி தோட்டாக்கள்

 

அந்த மர்ம வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இச்சோதனையில், அப்பைக்குள் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 3 தோட்டாக்கள், தோட்டாக்களை லோடு செய்ய பயன்படுத்தும் 3 ஹேண்டில்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணையை துவங்கினர்.

 

இப்பகுதியில் அடிக்கடி ரவுடிகளுக்கு இடையே தகராறு ஏற்படும் காரணத்தினாலேயே நள்ளிரவு மற்றும் பல்வேறு நேரங்களில் அப்பகுதியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இப்பகுதியில் உள்ள பிரபல ரவுடிகள் இரண்டு பேர் குழுவாக பிரிந்து அடிக்கடி மோதிக் கொள்ளும் சம்பவமும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஒருசில கும்பல் துப்பாக்கி முனையில் பலரை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வருவதாகவும் கூறப்படுகிறது.'

 

தீவிர விசாரணை

 

அப்போது மக்கள் ரவுடிகளால் அச்சமடைந்த நிலையில் காவல்துறையினர் ரவுடிகளை கைது செய்ய பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வப்பொழுது ரவுடிகளுக்கிடையே நடைபெறும் மோதல் காரணமாகவும் ரவுடிகள் மக்களை துன்பம் வகையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் காவல்துறையினர் சோதனை எப்பொழுது துப்பாக்கி குண்டுகள் பிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த துப்பாக்கி குண்டுகள் எதற்கு அவர் வைத்திருந்தார் யாரிடம் கொடுப்பதற்காக வைத்திருந்தார். சதி வேலை செய்வதற்காக ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.