செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுலா பயணமாக வர உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 50000 பேருக்கு நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியின் பயணம் பின்வருமாறு. சென்னையில் தனது இல்லத்திலிருந்து புறப்படும் முதலமைச்சர், இன்று காலை முதல் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
முதல் நாள் 10.03.2025 திங்கட்கிழமை - காலை நிகழ்ச்சிகள் - காலை 10:30 மணி
கிழக்கு கடற்கரை சாலை சாலை பூஞ்சேரி வழியாக பழைய மகாபலிபுரம் சாலை-பையனூர் வந்தடைதல். செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கோத்ரேஜ் ஆலை திறந்து வைக்கும் நிகழ்வு
காலை 11 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சாலையில் உள்ள கோத்ரேஜ் ஆலையை திறந்து வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து 11.30 மணி அளவில், மீண்டும் பூஞ்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக நெம்மேலி வந்தடைந்து, நெம்மேலி லீலாவதி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.பின்னர் இரவு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார்
கொஞ்சம் படிங்க பாஸ்: Singer Krish: "அடிச்சா எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்" -பாடகர் கிரிஷ் அதிரடி.
நாளை - 11.03.2025 செவ்வாய் கிழமை காலை நிகழ்ச்சிகள்
நாளை காலை 10 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை சாலை - பூஞ்சேரி வழியாக திருக்கழுக்குன்றத்தில் ROAD SHOW மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதில் திருப்போரூர் தொகுதியில் உள்ள ஒன்றிய – நகர பேரூர் கழகத்தினர் & பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்
காலை 10:30 மணி
திருக்கழுக்குன்றம் சாலை வழியாக செங்கல்பட்டு வந்தடைந்து இராட்டினக்கிணறு சந்திப்பு மேம்பாலம் கீழ்பகுதி முதல் -CMC மருத்துவமனை மற்றும் திருமணி சந்திப்பு வரை ROAD SHOW மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இதில் செங்கல்பட்டு, ஆலந்தூர், திருப்பெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய 5 தொகுதியில் உள்ள ஒன்றிய நகர பேரூர் கழகத்தினர் & பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: Coimbatore Shutdown: கோவையில் மின்தடை (11.03.2025 ): மின்வாரியம் சொன்னது என்ன?
காலை 11 மணி
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.