செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தி

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் ச.அருண்ராஜ், தலைமையில் இன்று (12.06.2024) நடைபெற்றது.

இன்றைய தின வருவாய் தீர்வாயத்தில் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள திருவடிசூலம், பெரியபுத்தேரி, பொருந்தாவக்கம், சென்னேறி, அம்மணம்பாக்கம், தேனூர், பட்ரவாக்கம், கோவிலந்தாங்கல்,  நத்தம் அ, நத்தம் ஆ, செங்கல்பட்டு, குண்டூர், வல்லம், மேலமையூர், ஆலப்பாக்கம், வேண்பாக்கம், அனுமந்தபுத்தேரி, ஒழலூர், இருங்குன்றம்பள்ளி, வேதநாராயணபுரம், அஞ்சூர், அனுமந்தை, குண்ணவாக்கம், வீராபுரம், ஈச்சங்கரணை, பழவேலி (கம்மாளம்பட்டு) ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 145 மனுக்கள் பெறப்பட்டது.

கலந்து கொண்ட பொதுமக்கள்

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அவர்களின் சீரிய முயற்சியாலும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைக்கிணங்க CSR (Corporate Social Responsibility) நிதி மூலம் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு செயற்கை கால், மற்றும் 2 பயனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகளும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  அறிவுடைநம்பி, செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1433 பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராமக்கணக்குகளை தணிக்கை செய்திடவும் கீழ்க்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தரவிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நிரல்

வ.

எண்.

வருவாய் தீர்வாய அலுவலர்

வருவாய் தீர்வாயம் நடத்தும் வட்டம்

வருவாய்  தீர்வாய  நாட்கள்

முதல்

முடிய

நாட்கள்

01.

மாவட்டஆட்சித்தலைவர், செங்கல்பட்டு

செங்கல்பட்டு

12.06.2024

14.06.2024

3

18.06.2024

-

1

மொத்த நாட்கள்     04

02.

மாவட்ட வருவாய் அலுவலர், செங்கல்பட்டு

வண்டலூர்

12.06.2024

14.06.2024

3

மொத்த நாட்கள்     03

03.

சார் ஆட்சியர், செங்கல்பட்டு

திருப்போரூர்

12.06.2024

14.06.2024

3

18.06.2024

20.06.2024

3

மொத்த நாட்கள்     06

04.

வருவாய் கோட்டாட்சியர்,

மதுராந்தகம்

செய்யூர்

12.06.2024

14.06.2024

3

18.06.2024

21.06.2024

4

25.06.2024

27.06.2024

3

மொத்த நாட்கள்     10

05.

வருவாய் கோட்டாட்சியர்.

தாம்பரம்

பல்லாவரம்

12.06.2024

13.06.2024

2

மொத்த நாட்கள்     02

06

தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி),

செங்கல்பட்டு

தாம்பரம்

12.06.2024

14.06.2024

3

மொத்த நாட்கள்     03

07.

உதவி ஆணையர்(கலால்),

செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம்

12.06.2024

14.06.2024

3

18.06.2024

21.06.2024

4

25.06.2024

-

1

மொத்த நாட்கள்.   08

08.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்),

செங்கல்பட்டு

மதுராந்தகம்

12.06.2024

14.06.2024

3

18.06.2024

21.06.2024

4

25.06.2024

28.06.2024

4

மொத்த நாட்கள்.   11