Breaking News LIVE : மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு குவியும் கண்டனங்கள்

Breaking News: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே உடனுக்குடன் காணலாம்,.

உமா பார்கவி Last Updated: 26 Feb 2023 08:55 PM
மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு குவியும் கண்டனங்கள்

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

Breaking News LIVE : திருவண்ணாமலை அருகே ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள கமண்டல நாக நதியில் மூழ்கி இருவர் உயிரிழப்பு - கை கழுவ  ஆற்றில் இறங்கியபோது சேற்றிய சிக்கிய பிரகலாதனை காப்பாற்ற முயன்ற சிவர்சன் ஆகிய இருவரும் உயிரிழப்பு 

Breaking News LIVE : விழுப்புரம் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 8 தனிப்படைகள் அமைப்பு

விழுப்புரம் அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைப்பு - மாணவியுடன் இருந்த நண்பரை தாக்கி நகைகளை பறித்துச் சென்ற இருவரை பிடிக்கும் பணி தீவிரம் 

தமிழ்நாட்டில் ஆவின்பால் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் நாசர்

தமிழ்நாட்டில் ஆவின்பால் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

Breaking News LIVE : தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு போட்டி -33 பேர் காயம் 

தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 33 பேர் காயம் - பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடந்த ஜல்லிக்கட்டில் 733 காளைகள், 169 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Breaking News LIVE : கன்னியாகுமரியில் கடலில் குழந்தையுடன் இறங்கிய தாய் உயிரிழப்பு 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 3 வயது மகன் மில்ஷித்துடன் கடலில் இறங்கிய தாய் சசிகலா உயிரிழப்பு - குழந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

புதிய நடைபயணத்தை அறிவித்த காங்கிரஸ்...!

இந்திய ஒற்றுமை நடைபயணம் போல, கிழக்கில் இருந்து மேற்கு வரை புதிய நடைபயணம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Breaking News LIVE : சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு 

காங்கேயம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

Breaking News Live : நாளை டெல்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின். நாளை மறுநாள் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking News Live : கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சார்மி உயிரிழந்துள்ளார். சிறுமியின் தந்தை தனது வீட்டில் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் தனது மகளே விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Breaking News Live : ஆவின் பால் தட்டுப்பாடு விவகாரம் - அமைச்சர் நாசர் ஆய்வு

மதுரை ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பால் தட்டுப்பாட்டால் சில பகுதிகளில் குறித்த நேரத்தில் பால் வரவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

Breaking News Live : சென்னை-புதுச்சேரிக்கு சரக்கு கப்பல் சேவை தொடக்கம்

சென்னை-புதுச்சேரி துறைமுகங்களுக்கு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. புதுச்சேரியில்  இருந்து சரக்கு போக்குவரத்தை தொடங்க சென்னை எண்ணூர் துறைமுகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Breaking News Live : ரூ.447 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை ஆலந்தூர், பெருங்குடி மண்டலத்தில் ரூ.447 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 120.55 கி.மீ நீளத்தில் ஒருங்கிணைந்த வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Breaking News Live : சேலம் மெட்ரோ ரயில் - சாத்தியக்கூறு ஆய்வு

சேலம் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடைபெற்று வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து அறிக்கை அரசிடம் ஒப்புதலுக்காக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News Live : விம்கோநகர் மெட்ரோ பணிமனை விரைவில் திறப்பு

சென்னை விம்கோநகர் மெட்ரோ ரயில் பணிமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் பழுது ஏற்பட்டால் உடனே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக பணிமனை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking News Live : விழுப்புரம் அருகே பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

விழுப்புரம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து செல்போன் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

Breaking News Live : குடியரசு துணைத் தலைவரின் புதுச்சேரி வருகை ரத்து

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜெகதீப் தன்கர் பங்கேற்கவிருந்தார்.

Breaking News Live : புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. 

Breaking News Live : தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் ரயில்

சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.  தேஜஸ் ரயில் தாம்பரத்தில்  இன்று முதல் நின்று செல்லும் நிலையில் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. 

Background

சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


9 மாதங்களை கடந்தும் மாறாத விலை 


கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.


அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.  இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 281வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 









 


அதன்படி இன்று (பிப்ரவரி 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என பெட்ரோலியம் மற்றும்  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.