Breaking News LIVE: நாட்டின் முதல் AI பள்ளி.. ஆசிரியர்களுக்கு இனி வேலை இல்லையா? மாற்றாக வருகிறது ChatGPT மென்பொருள்
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் மாணவர்கள் மத்தியில் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டு மக்களுக்கும் விஜய் மக்கள் இயக்கத்துக்குமான தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இயக்கத்தின் தலைமை பிறப்பிக்கும் உத்தரவு, இயக்கத்தின் புதிய அறிவிப்புகள், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் வந்தவுடன் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தெரிவித்தவுடன் அதனை உரிய ஹேஷ்டாக்குடன் பதிவிட்டு ட்ரெண்ட் செய்ய வேண்டும்" என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை ஒட்டுமொத்த நாடே கொண்டாடியதை நெகிழ்ச்சியோடு பார்த்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மதுரையில் நடந்ந பயங்கர ரயில் தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களின் வளர்ச்சி வேளாண் சார்ந்தது மட்டுமின்றி, தொழில் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு அரசு துரோகம் இழைத்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திமுக கவுன்சிலர் கிருபானந்தம், அப்பு ஆகியோரை மர்ம நபர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வார இறுதி நாட்கள் என்பதால் வழக்கத்தைவிட உள்நாட்டு விமான கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை-திருவனந்தபுரம், சென்னை-கொச்சி செல்லும் விமானங்களின் பயணக் கட்டணம் உயர்ந்துள்ளது.
மதுரை அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் விலைமதிப்பற்ற பலியானதை அறிந்து வேதனை அடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று தனது ட்விட்டரில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டிருக்கிறார்.
மதுரையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தடயவியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 93605 52608, 80156 81919 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 43,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ. 5,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மதுரையில் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர், ரயில்வே உயர் அதிகாரிகள், காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைப்பட்டிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை அருகே ரயில் தீ விபத்தில் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி தரப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையில் ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட சிலிண்டரே காரணம் என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருந்து ஆன்மீக பயணமாக வந்த ரயிலில் பயணித்த 9 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
Background
மதுரையில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து ஏற்பட்டது எப்படி என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் விளக்கம்:
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில் “26.8.23 அன்று காலை 5.15 மணி அளவில் மதுரை யார்டில் உள்ள தனியார் பார்ட்டி கோச்/தனி நபர் கோச்சில் தீ விபத்து ஏற்பட்டதாக நிலைய அதிகாரி தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் 5.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். 7.15 மணிக்கு தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மற்ற பெட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தனியாரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த பெட்டிகள் ரயில் எண். 16730 கொண்ட மதுரை விரைவு ரயிலில் (புனலூர் _ மதுரை எக்ஸ்பிரஸ்) நேற்று மாலை நாகர்கோவில் சந்திப்பில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து 3.47 மணிக்கு மதுரை வந்தடைந்ததும் அந்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்டு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டது.
அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகள், சட்ட விரோதமாக எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்டு பல பயணிகள் பெட்டியிலிருந்து இறங்கினர். முன்னதாக சில பயணிகள் நடைமேடையிலேயே கீழே இறங்கி இருந்தனர். ஆகஸ்ட் 17ஆம் தேதி லக்னோவில் இருந்து இந்த ரயில் தனது பயணத்தை தொடங்கியது. சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் மூலம் நாளை அவர்கள் சென்னை திரும்ப திட்டமிட்டு இருந்தனர். அங்கிருந்து லக்னோ திரும்பவும் முடிவு செய்திருந்தனர்.
ஐஆர்சிடிசி போர்ட்டலைப் பயன்படுத்தி எந்தவொரு தனிநபரும் ரயிலில் பார்ட்டி கோச்சை முன்பதிவு செய்யலாம். கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த பெட்டியை போக்குவரத்து சேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -