இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மிகவும் காஸ்ட்லியான வீடான மும்பை ஆல்ட்டா மௌண்ட் சாலையில் அமைந்திருக்கும் அன்டிலியாவில் வசிக்கிறார்.  


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை வைத்துள்ள போதிலும் வருடத்தில் பாதி நேரம் மும்பையிலும், பாதி நேரம் லண்டனிலும் தங்க அம்பானி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




சமீபத்தில் மும்பையில் தன் வீட்டருகே வெடிகுண்டுடன் நிறுத்தப்பட்ட கார் சம்பவத்திற்குப் பின்பு அம்பானி குடும்பம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.


PM Modi Kedarnath Visit | ஆதி சங்கராச்சார்யாரின் சிலையைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி.. முழு விவரம்..


முன்னதாக, முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் கட்டடத்தில் 49 பிரமாண்ட பெட்ரூம்களுடன் பல வசதிகள் உள்ளன. இந்த வீட்டிற்குத்தான் தற்போது முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் செல்ல உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.


பக்கிங்ஹாம்ஷைர் ஸ்டோக் பார்க் இதற்கு முன்பு ஆடம்பர ஹோட்டலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பாகவே ஸ்டோக் பார்க் கட்டடத்தில் state-of-the-art மெடிக்கல் சேவை தளம் அமைக்கப்பட்டது.




அதுமட்டும் அல்லாமல் மும்பை அன்டிலியாவில் இருப்பது போல் பிரமாண்டமான கோயிலும் ஸ்டோக் பார்க்கில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கட்டப்பட்ட கோயிலுக்கு ராஜஸ்தானிலிருந்து மார்பிள் கல் கொண்டு செல்லப்பட்டது.


ஆர்டர் செஞ்சது பாஸ்போர்ட் கவர்.. வந்ததோ உண்மையான பாஸ்போர்ட்.! அதிர வைத்த அமேசான்!


அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகையை குடும்ப உறுப்பினர்களுடன் மும்பை அன்டிலியா வீட்டில் கொண்டாடும் அம்பானி இந்த முறை லண்டனில் கொண்டாடினார். இதனால் அம்பானி இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் இருக்கின்றன என கருதப்படுகிறது. அதேசமயம் இதுதொடர்பாக அம்பானி தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: தீபாவளி போனஸாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. மாஸ் காட்டிய நிறுவனம்! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்!


இப்படி ஒன்னு காட்டுல இருக்கா? ஆராய்ச்சியை தொடங்க வைத்த ஒரு இன்ஸ்டா பதிவு!