இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் இமாலய மலைப்பகுதிகளில் புதிதாக விலங்குகள் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய வகை பாம்பு உயிரினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அதில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உள்ளது? அது என்ன?


இமாச்சலச் பிரதேசம் மாநிலத்தில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து புதிய வகை பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது முதலில் குர்கி வகை பாம்பு என்று கருதப்பட்டது. ஆனால் அதை சரியாக ஆய்வு செய்த பார்த்த போது அது குர்கி வகை பாம்புகளில் இருந்து சற்று மாறுபட்டது என்று தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உள்ளது. அதாவது இந்த புதிய வகை பாம்பை கண்டுபிடிக்க உதவியது ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள படம் தான். 


வீரேந்தர் என்ற ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய சொந்த ஊரான இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் விலங்குகள் மற்றும் அவர் படம் எடுக்கும் உயிரினங்கள் ஆகியவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அந்த வகையில் சம்பா பகுதியில் இருந்த பாம்பு என்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தை அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதிவிட்டிருந்தார். 




இதைத் தொடர்ந்து இந்த படத்தை ஸிஷாசன் ஏ மிஸ்ரா என்ற ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்துள்ளார். முதலில் இது குர்கி வகை பாம்பு போல் இருந்ததுள்ளது. ஆனால் இதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் சற்று மாறுபாட்டு உள்ளது. எனவே இந்த பாம்பு தொடர்பான மரபணு ஆராய்ச்சியை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனினும் அப்போது கொரோனா ஊரடங்கு என்பதால் ஆய்வுக் கூடங்களில் இதை செய்ய முடியவில்லை. 


இந்தாண்டு மீண்டும் கொரோனா சூழல் சற்று குறைந்த பிறகு அவர்கள் மீண்டும் ஆய்வை தொடங்கியுள்ளார். மரபணு ஆராய்ச்சி செய்து இந்த பாம்பு குர்கி வகை பாம்பிலிருந்து மாறுபட்டது என்று உறுதி படுத்தியுள்ளனர். அதன்பின்னர் இந்த ஆய்வை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஜெர்னலில் பதிவு செய்துள்ளனர். இந்தச் சூழலில் அந்த ஆய்வு தற்போது ஜெர்னலில் வந்து உறுதியாகியுள்ளது. இந்த புதிய வகை பாம்பிற்கு ஒலிகாடன் சுராஹென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இமாச்சலப் பிரதேச சுரா பள்ளதாக்கை குறிக்கும் வகையில் இந்த பாம்பிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ஒரு புதிய பாம்பு வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:தீபாவளி பூஜையில் சவுக்கு அடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர்.. வைரல் வீடியோ!