சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்குநர் சிவா இயக்கியிருக்கும் படம் அண்ணாத்த. நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். டி. இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியையொட்டி நேற்று வெளியான இப்படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அதேசமயம் அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக கடுமையான எதிர்வினைகளை சந்தித்துவருகிறது. 


படத்தின் கதையில் புதிதாக எதுவுமில்லை. சிவா தனது முந்தைய படமான விஸ்வாசத்திலிருந்து கொஞ்சம், திருப்பாச்சி திரைப்படத்திலிருந்து கொஞ்சம் எடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார். திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. 




ரஜினி கொடுத்த வாய்ப்பினை சிவா வீணடித்துவிட்டார். இது மிக மிக பழமையான கதை. காமெடி என்ற பெயரில் எதையோ செய்துவைத்திருக்கிறார்கள். ரஜினி கொடுத்த வாய்ப்பை முருகதாஸைத் தொடர்ந்து சிவாவும் வீணடித்துவிட்டார் என தீவிரமாக விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இதனால் இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பு கடும் அப்செட் என கோலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகிறது. 


இந்நிலையில் புலி மற்றும் இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.


 






அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பார்ந்த விமர்சகர்களே, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறைக்கு வாழ்வாதாரத்துக்கான ஒரு மிகப்பெரிய மீட்சி தேவை. எனவே மதிப்பீடுகளை வழங்குவதற்கு பதில் ஆதரவு கொடுப்போம். 




திரையரங்குகளில் ஆனந்த் ஷங்கரின் 'எனிமி' மற்றும் சிவாவின் 'அண்ணாத்த' ஆகிய இரண்டு படங்களும் முழு பொழுதுபோக்கு படங்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. எதிர்பார்ப்புகள் வேறுபடலாம். தயவுசெய்து பொதுவான ரசிகர்களைத் தடுக்க வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண