உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்ய வாழ்வுக்காகவும், உடல்நல முன்னேற்றத்திற்காகவும் சைக்கிள் ஓட்டுதலின் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில், உலக சைக்கிள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 03 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு, ஐநா பொதுச் சபை ஜூன் 3-ஆம் தேதியை ‘சர்வதேச சைக்கிள் தினமாக’ அறிவித்ததால், இந்த சிறப்பு நாள் அப்போதிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நூற்றாண்டுகளாக மனிதர்களின் பயன்பாட்டில் உள்ள இந்த மிதிவண்டிகளின் தனித்துவம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை இந்த நாள் அங்கீகரிக்கிறது. இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தில், மிதிவண்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் பற்றி நீங்கள் அறிந்திராத சில அற்புதமான உண்மைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
- 1817 ஆம் ஆண்டில், கார்ல் வான் டிராய்ஸ், ஒரு குதிரையில்லா வண்டியைக் கண்டுபிடித்தார். அது அவருக்கு வேகமாகச் செல்ல உதவியதால் அப்போது பிரபலமானது. இரு சக்கரங்கள் கொண்ட இந்த வண்டி, கால்களை தரையில் தள்ளுவதன் மூலம் உந்தப்பட்டு முன்னோக்கி செல்லும் வகையில் கண்டறியப்பட்டது. இந்த இயந்திரம் முதலில் 'டிரைசின்' என்று அறியப்பட்டது, மேலும் அதுவே நவீன கால சைக்கிள் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
- 'ஹை-வீல் சைக்கிள்' 1870களில் பிரபலமான பாணியாக இருந்தது. "சைக்கிள்" என்ற சொல் 1860 களில் அறிமுகப்படுத்தப்படவில்லை, இது ஒரு இயந்திர இயக்கத்துடன் கூடிய புதிய வகையான இரு சக்கர வாகனத்தை விவரிக்க பிரான்சில் உருவாக்கப்பட்டது.
- ஃபிரெட் ஏ பிர்ச்மோர், 1935 ஆம் ஆண்டில் சைக்கிள் மூலம் உலகை சுற்றினார். ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா வழியாக சென்ற இந்த பயணம் 40,000 மைல்களைக் கடந்தது.
- அமெரிக்காவில், மக்கள் சைக்கிள்களை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றனர்.
- நெதர்லாந்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எட்டு பேரில் ஏழு பேர் சைக்கிள் வைத்துள்ளனர்.
- ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 100 மில்லியன் மிதிவண்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
- சைக்கிள் என்ற சொல் 'பைசைக்லெட்' என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்தப் பெயருக்கு முன், மிதிவண்டிகள் Velocipedes என அழைக்கப்பட்டன.
- கடந்த 30 ஆண்டுகளில், சைக்கிள் மூலம் செய்யப்படும் டெலிவரி சேவைகள் ஒரு முக்கியமான தொழில்துறையாக வளர்ந்துள்ளன, குறிப்பாக நகரங்களில், கூரியர்கள், அதிவேகமாக சென்றடைய, போக்குவரத்து நெரிசலில் புகுந்து சீக்கிரம் செல்ல இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
- சைக்கிள் மோட்டோகிராஸ் (BMX), சைக்கிள் டிராக் பந்தயத்தின் ஒரு தீவிர விளையாட்டு பாணி ஆகும். சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த 2008 ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒரு விளையாட்டாக அது மாறியது.
- முதல் 40 வருட சைக்கிள் வரலாற்றில் மிகவும் பிரபலமான மூன்று வகையான சைக்கிள்கள் பிரெஞ்சு போன்ஷேக்கர், ஆங்கில பென்னி-பார்திங் மற்றும் ரோவர் சேஃப்டி சைக்கிள் ஆகும்.