தாம்பத்ய உறவு என்பது தம்பதிகளுக்கு இடையே மேலும் அன்பை அதிகரிக்கும் ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த பந்தத்தால் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவரின் உடல்களிலும் சில முக்கியமான நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த உறவில் ஈடுபடும் போது இருவரின் உடலிலும் நல்ல வகையான உணர்வை தரும் சுரப்பிகள் சுரக்கும் என்பதால் அது அவர்களுக்கு மனநிறைவைத் தரும். அத்துடன் தாம்பத்ய வாழ்வு சிறப்பாக உள்ள தம்பதிக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய சார்ந்த கோளாறுகள் போன்ற நோய்கள் வருவது சற்று குறையும் என்று ஒரு மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் செய்து சமாதானமான பிறகு தாம்பத்ய உறவில் ஆர்வம் அதிகரிக்குமா? இதற்கு வல்லுநர்கள் மற்றும் ஆய்வுகள்  கூறுவது என்ன?


பொதுவாக தம்பதியர் இருவர் இடையே சண்டை நடந்தபிறகு  அவர்களிடம் தாம்பத்ய உறவு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த முடிவுகளின்படி சண்டைக்கு பிறகு தம்பதிகளிடையே தாம்பத்ய உறவில் ஆர்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது தெரியவந்துள்ளது. அதற்கு சில காரணங்களும் கண்டறியப்பட்டுள்ளன. 


ஹார்மோன்கள்:


பொதுவாக தம்பதிகள் இருவர் சண்டை போட்ட பிறகு அவர்களுடைய உடம்பில்  அட்ரினலின், கார்ட்டோசோல் உள்ளிட்ட ஹார்மோன்கள் வெளியாகிவிடும். அதற்கு பின்பு தம்பதிகள் இருவருக்கும் இடையே நல்ல நெருக்கும் ஏற்படும் சூழல் உருவாகும். இது அவர்களின் தாம்பத்ய உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். 


சண்டை ஒரு தூண்டுகோள்:


தம்பதிகள் இருவருக்கும் இடையே சண்டைக்கு பிறகு அவர்களுடைய உடலில் ஒரு தூண்டுதல் ஏற்படும் சூழல் அதிகமாக இருக்கும். இதுவும் அவர்கள் இருவர் இடையே தாம்பத்ய உறவை அதிகரிக்கும் வாய்ப்பாக அமையும். மேலும் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை நடக்கும்போது அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு விதமான அன்பான சூழல் ஏற்படும். அந்த அன்பான சூழல் அவர்களுடைய பழைய தருணங்களை ஒரு விதத்தில் அவர்களுடைய தாம்பத்ய உறவிற்கு கூடுதல் வலுச்சேர்க்கும் வகையில் அமையும். 


இவ்வாறு சண்டைக்கு பிறகு இயல்பாகவே தம்பதிகள் இருவருக்கும் இடையே அன்பு அதிகரிப்பது போல் தாம்பத்யமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 


மேலும் படிக்க:பெண்களுக்கு வயது குறைந்த ஆண்கள் மீது ஈர்ப்பு வர காரணம் என்ன?