திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் பழைய பேருந்து நிலையத்தின்  அருகில் ஆரணியை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவரின் அசைவ 7 ஸ்டார் ஓட்டல் பல வருடங்களுக்கு மேல் அங்கு இயங்கி வருகிறது. மேலும் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட  லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்த். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு லோசினி என்ற 10 வயது மகளும் சரண் என்ற 14 வயது மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் ஆரணியில் உள்ள 7 ஸ்டார் ஓட்டலுக்கு சென்று தந்தூரி சிக்கன், பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.



சிறிது நேரத்தில் நான்கு நபர்கள் திடீரென வாந்தி எடுத்துள்ளனர். பிறகு அங்கே மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு அதிர்ச்சி  அடைந்த பொதுமக்கள் இவர்களை  ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த், சரண், பிரியதர்ஷினி ஆகிய மூன்று நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது பெண் குழந்தை லோசினி சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலயே உயிரிழந்தார்.


அதனையொடுத்து ஆரணி நகர் பகுதியை சேர்ந்த ஜாகிர் வயது (30) பாத்திமா முகமது வயது (4) விஷ்ணு ,சீனிவாசன், யாகூப் திலகவதி, சரவணன் உள்ளிட்டோரும்   ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குபட்ட எத்திராஜ் நகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் சந்தியா மற்றும் குழந்தை பிரணவ் வயது (4) செங்கம் தாலுக்கா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசன் வயது (21) மோனிகா வயது (15) கார்த்திகா வயது  (16) லோகேஷ் வயது  (15) உள்ளிட்ட 19 நபர்களும்  ஆரணி 7 ஸ்டார் அசைவ ஓட்டலில் தந்தூரி சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுவை வாங்கி சாப்பிட்டவர்களுக்கும்  திடீரென  வாந்தி மயக்கம் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையிலும் மற்றும்  ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில் ஆரணி கோட்டாச்சியர் கவிதா மற்றும் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் அசைவ உணவக 7 ஸ்டார் ஒட்டலை ஆரணி கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அசைவ ஓட்டலுக்கு சீல் வைத்தனர். அசைவ ஒட்டலில் உணவருந்தி பெண் குழந்தை பலியான சம்பவம் ஆரணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது