பொதுவாக இந்தியாவில் திருமணங்கள் என்றால் ஆண்களுக்கு வயது அதிகமாகவும் பெண்களுக்கு வயது குறைவாகவும் இருக்கும்படியே பெரும்பாலும் நடத்தப்படுகிறது. ஆனால் அவ்வப்போது பெண்ணிற்கு வயது அதிகமாகவும் ஆண்ணிற்கு வயது குறைவாகவும் நடத்தப்படுகிறது. ஒரு சில திரை பிரபலங்கள் கூட தன்னைவிட வயதில் சிறியவர்களை திருமணம் செய்து உள்ளனர். திருமணத்தை போல் பாலியல் ரிதியிலான ஈர்ப்பு சிலருக்கு தன்னைவிட மிகவும் அதிகமான வயதில் உள்ளவர்கள் மீது வருவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. 


இப்படி ஒருவருக்கு தன்னைவிட வயதில் மூத்தவர்கள் மீது அதிக ஈர்ப்பு வர காரணம் என்ன? வல்லுநர்கள் மற்றும் உளவியியல் கூறும் உண்மை என்ன?


பொதுவாக குழந்தையாக பிறக்கும் போது ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினத்தவரும் தாய் மற்றும் தந்தை அன்பில் வளர்க்கப்படுகிறார்கள். அப்போது முதல் அவர்களின் எண்ண ஓட்டத்தில் தன்னைவிட வயது அதிகமானவர்களிடம் இருந்து அதிக அன்பு கிடைக்கும் என்று எண்ணம் மேலோங்கி இருந்து வருகிறது என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே அவர்கள் பருவ வயதை எட்டிய உடன் தன்னைவிட பெரிய வயதில் உள்ளவர்கள் அதிக அன்பை காட்டும் போது அவர்கள் மீது இவருக்கு அன்பு வருகிறது. அத்துடன் அந்த வயதிற்கு ஏற்ற பாலியல் ஈர்ப்பும் சேர்ந்து வர தொடங்குகிறது என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் பெண்களைவிட ஆண்களுக்கு தங்களைவிட அதிகமான வயதில் உள்ள பெண்கள் மீது அதிக ஈர்ப்பு வருவது அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆய்வில் ஆண்களுக்கு தன்னைவிட வயதில் மூத்த பெண்கள் மீது ஈர்ப்பு வருவதற்கு சில காரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள காரணங்கள்:


வயதான பெண்களின் முதிர்ச்சி:


 பெண்கள் எப்போதும் ஆண்களைவிட நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள். ஆகவே வயதான பெண் என்றால் அவருடைய அனுபவத்தை வைத்து ஆண்மகனுக்கு நல்ல ஆதரவு அளிப்பார். அத்துடன் அவருக்கு ஒரு நல்ல யோசனையும் வழங்குவார். மேலும் அவருடைய அன்பை ஆண்கள் எளிதாக ஏற்று கொள்ள கூடும் என்று உளவியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 




மேலும் வயதில் மூத்த பெண்களுக்கு வயதில் குறைவான ஆண்கள் மீது ஈர்ப்பு வர காரணம் என்ன?


ஒரு சில வயதான பெண்களுக்கு தன்னைவிட வயதில் குறைவான ஆண்கள் மீது ஈர்ப்பு வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் அதிகம் அரவணைப்பு கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தான். வயது முதிர்ச்சி அடைந்த பெண்களுக்கு தங்களுடைய அனுபவம் மற்றும் அரவணைப்பை தன்னைவிட வயதில் குறைந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். மேலும் தன்னைவிட வயதில் குறைவான ஆண்களுக்கு அவர்கள் ஒரு வழிகாட்டியாக திகழ்வும் வாய்ப்பு இருக்கும். ஏனென்றால் அவர்கள் அந்த ஆணைவிட வயது, வேலை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதுவும் அவர்களுக்கு இப்படி ஒரு ஆசை வர காரணமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


இதைபோல் பல காரணங்கள் இருந்தாலும் எப்போதும் இந்த வயது வித்தியாசம் ஒரு குறிப்பிட அளவை தாண்டினால் அது ஒரு உளவியல் பிரச்னையாக மாற வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதுபோன்ற ஈர்ப்பு அதிகமாக இருக்கும் நபர்கள் உடனடியாக உளவியல் நிபுணர்களிடம் தேவைப்பட்டால் கலந்து ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றனர். 


மேலும் படிக்க: ‛என்ன ஒரு ரசனை...’ குலாப் ஜாமுனுக்கு’ ஓல்ட் மாங்க்’ தடுப்பூசி! வைரல் வீடியோ!