மார்கழி மாதம் துவங்கியிருப்பதால் தமிழ்நாடு முழுவதும், குளிர் தொடங்கியுள்ளது. குளிர்காலங்களில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்து வருகிறது. பொதுவாகவே சளி பிடித்தவர்கள் பழம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் கூட சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். குறிப்பாக குளிர் காலங்களில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. உண்மையில் குளிர்காலங்களில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாதா ? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


குளிர்காலங்களில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


எலுமிச்சை பழம் ( Lemon ) 


நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட பழங்களில் எலுமிச்சை பழம் பிரதான இடத்தை பிடித்துள்ளது. எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் சி , வைட்டமின் பி6, வைட்டமின் ஈ , கால்சியம் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இதேபோன்று எலுமிச்சம்பழத்தில் மாலிக் அமிலங்கள் மற்றும் பிற ரசாயனங்கள் உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை பலப்படுத்துகின்றன.


பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் எதிராக எலுமிச்சம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் செயல்படுகின்றன. பாக்டீரியாக்கள் வளர்ச்சியை தடுப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. குளிர்காலங்களில் எலுமிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆரஞ்சு பழம் ( Orange Fruit)


சிட்ரஸ் பழங்களில் நாம் அனைவருக்கும் தெரிந்த பழமாக ஆரஞ்சு பழம் இருந்து வருகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்து இருக்கிறது.


ஒரு சிறிய அளவிலான ஆரஞ்சு பழத்தில் 50 முதல் 60 மில்லி கிராம் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி சத்துக்கள் உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதால், நோய் எதற்கு சக்தியை அதிகரிக்கிறது.


இதையும் படிங்க: இவர் நடிப்புக்கு ஆஸ்கர் குடுங்கப்பா...அல்லு அர்ஜூனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்


குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற பழமாக ஆரஞ்சு பழம் இருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இதர அமிலங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக இயங்குவதற்கு உதவி செய்கின்றன. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆரஞ்சு பழம் உறுதுணையாக இருக்கிறது. அதேபோன்று ஆரஞ்சு பழம் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைய இருப்பதால் உடலை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. 


திராட்சை பழம் ( Grapes )


திராட்சை பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, பொட்டாசியம் , கால்சியம் மற்றும் நார் சத்துக்கள் அதிகளவு உள்ளன. அதேபோன்று இயற்கை வேதிப்பொருள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் உடலில் உள்ள செல்களுக்கு பாதுகாப்பாகவும் புத்துணர்ச்சியும் அளிக்கிறது. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையான தோல் வறட்சியை திராட்சைப்பழம் சாப்பிடுவதால் தடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதையும் படிங்க: Medical Staff Vacancy : மருத்துவத் துறையில் 26 காலி பணியிடங்கள் - முழுவிபரம் இதோ...!


இது தவிர அண்ணாச்சி பழம், நெல்லிக்காய், மாம்பழம், ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்களை குளிர்காலங்களில் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். ஏற்கனவே உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையின்படி, பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.