பாண்டிச்சேரியின் முதலைமச்சராக இருப்பவர் ரங்கசாமி. இந்திய அரசியலில் மூத்த அரசியல்வாதியான இவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. 


74 வயதான ரங்கசாமி மிக எளிமையான அரசியல்வாதியாக உள்ளார். 74 வயதிலும் தனது ஆரோக்கியத்தை முறையாக பராமரித்து வருகிறார். முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள் ஆகியவற்றின் மூலமாக தனது ஆரோக்கியத்தை பராமரித்து வருகிறார். 






இந்த நிலையில் ரங்கசாமி டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இளம் வீரர்  போல மிகவும் துடிப்புடன் பந்தை லாவகமாகவும், வேகமாகவும்  அடித்து விளையாடுகிறார். 


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலிலும், தனது ஆரோக்கியத்திற்காக இளைஞர்களுடன் இணைந்து டென்னிஸ் ஆடிய வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இளைஞர்களும் இவரைப் போல ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க விளையாட்டு, உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உடற்பயிற்சி நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.