புஷ்பா 2


புஷ்பா 2 படத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் .


சந்தியா திரையரங்கம் அமைந்துள்ள அதே பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது என காவல் துறை சார்பாக முன்பே தெரிவிக்கப்பட்டது . ஆனால் அதை மீறி அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு வருகை தந்ததாக அவர் தெரிவித்தார். இரு உயிர்கள் இறந்த பின்னும் அல்லு அர்ஜூனை திரையரங்கை விட்டு செல்லும்படி காவல்துறை கேட்டபோது அவர் முழு படம் பார்த்த பின்னரே அந்த இடத்தை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். ரேவந்த் ரெட்டி பேசியதைத் தொடர்ந்து மக்கள் அல்லு அர்ஜூன் மீது தான் தவறு என பேசத் தொடங்கினார்கள். அவர் பேசிய சில மணி நேரங்களில் அல்லு அர்ஜூன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். 


நாடகமாடினாரா அல்லு அர்ஜூன்


பத்திரிகையாளர்களை சந்தித்த அல்லு அர்ஜூன்  தெலுங்கு சினிமாவிற்கு பெருமை சேர்க்க தான் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்தில் நடித்து வருகிறேன் ஆனால் தனக்கு கிடைத்தது எல்லாம் கெட்டபெயர் தான். மேலும் தனது படத்தின் வெற்றியைக் கொண்டாடாமல் தான் மற்றும் வருத்தத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். 






பத்திரிகையாளர்களை சந்தித்து அல்லு அர்ஜூன் உணர்ச்சிவசமாக பேசினாலும் பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ரேவந்த் ரெட்டிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள் . மேலும் அல்லு அர்ஜூன் பத்திரிகையாளர் சந்திப்பில் பச்சையாக நடிக்கிறார் என்றும் அவரது நடிப்பிற்கு ஆஸ்கரே கொடுக்கலாம் என்று மேலும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.