ப்ரோக்கோலி பிடிக்கும் என்பவர்கள் அதை பாஸ்தாவுடன் சேர்த்து செய்யலாம். இத்தாலியன் உணவுகள் சாப்பிட வேண்டும் என்று க்ரேவிங்க்ஸ் இருந்தால் இதை நிச்சயம் செய்து சாப்பிடாலம். ஆரோக்கியம் முக்கியம் பாஸ் என்பவர்கள் இதை முயற்சி செய்யலாம். 


ப்ரோக்கோலி பெஸ்தோ பாஸ்தா


என்னென்ன தேவை?


ப்ரோக்கோலி - 500 கிராம்


திருநீற்றுப் பச்சிலை - ஒரு கப்


புதினா, கொத்தமல்லி - சிறிதளவு


சில்லி ஃப்ளேக்ஸ் - தேவையான அளவு


சீஸ் - தேவையான அளவு


வெண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்


பூண்டு - சிறிதளவு


ஸ்வீட்கார்ன் - ஒரு கப்


பாஸ்தா - 500 கிராம்


இத்தாலியன் சீசனிங் - தேவையான அளவு


க்ரீம் - சிறிதளவு


பால் - சிறிய அளவிலான ஒரு கப் 


செய்முறை:


பாஸ்தாவை நன்றாக வேகவைக்கவும். ஸ்வீட்கார், ப்ரோக்கோலி இரண்டையும் நன்றாக வேக வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் பூண்டு கிடைக்கும் அளவு தோல் நீக்கி அதை பொடியாக நறுக்கவும். பாஸ்தா சாஸ் செய்ய வேகவைத்த ப்ரோக்கோயில் முக்கால்பாகத்தை மிக்ஸியில் சேர்க்கவும். இதோடு திருநீற்றுப் பச்சிலை, சிறிதளவு புதினா, கொத்தமல்லி, சில்லி ஃப்ளேக்ஸ், சிறிதளவு பால் எல்லாம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.  கடாய் ஒன்றில் மிதமான தீயில் வெண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு அரைத்து வைத்த பாஸ்தா சாஸ் சேர்க்கவும். 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். அடுத்து, வேக வைத்த பாஸ்தா, இத்தாலியன் ஸ்பைசஸ், சீசனிங், வேக வைத்த ஸ்வீட்கார்ன் என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிதளவு க்ரீம் சேர்க்கலாம். அவ்ளோதான் ப்ரோக்கோலி பெஸ்தோ பாஸ்தா தயார். 


ப்ரோக்கோயில் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது. பெஸ்தோ சாஸ் தயாரிக்க  பயன்படுத்தப்படும் திருநீற்றுப் பச்சிலையிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது.