தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வாழ்வில் முக்கியமாக பின்பற்ற வேண்டியது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் வார்மப் பயிற்சிகள், செய்ய வேண்டும். இது உடலில் எந்த தசை பிடிப்பும் வராமல் பாதுகாக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் சில விஷயங்களை பின்பற்றுவது கட்டாயம். இது உடற்பயிற்சி பயன்கள் முழுமையாக கிடைக்க உதவியாக இருக்கும். சில விஷயங்களை செய்வோம், அது தவறா சரியா, இதை செய்யலாமா கூடாதா என்று தெரியாமல் செய்வோம். ஏன் செய்ய கூடாது என தெரிந்து கொள்வோம்.
தண்ணீர் குடிக்க வேண்டும்
உடற்பயிற்சியின் போது உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலில் நீர்சத்து குறைந்து விடும். இதை தவிர்க்க உடற்பயிற்சி முடித்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். சிலர் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் தசை வலிகள் , சோர்வு ஆகியவற்றை உணர்வார்கள். தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். உடற்பயிற்சி முடித்த பிறகு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சிக்கு பிறகு ஓய்வெடுக்க வேண்டும்
சிலர் உடற்பயிற்சி செய்யும் போது உடற்பயிற்சிக்கு நடுவே ஓய்வெடுக்க மாட்டார்கள். அதனால் பயிற்சி முடிந்த பிறகு மயக்கம், தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும். உடற்பயிற்சியின் போது இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகமாகிறது. மீண்டும் இரத்த நாளங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நேரம் எடுத்து கொள்ள வேண்டும். அதனால் ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையில் ஓய்வு தேவைப்படும். அதனால் உடற்பயிற்சிக்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
சர்க்கரை அதிகமாக எடுத்து கொள்ளுதல்
உடற்பயிற்சி முடித்த பிறகு, சோர்வாக இருப்பதாக நினைத்து சிலர் சர்க்கரை எடுத்து கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு. உடற்பயிற்சி செய்வதே உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதற்கு தான். உடற்பயிற்சி முடிந்த பிறகு அதிக கலோரி கொண்ட சர்க்கரை போன்ற உணவுகளை எடுத்து கொள்வதால் முழுமையான நன்மைகள் கிடைக்காது. அதனால் உடற்பயிற்சி முடிந்த பிறகு அதிக கலோரி கொண்ட உணவுகள், சர்க்கரை, இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆடைகள்
உடற்பயிற்சி முடித்த பிறகு அதிக வியர்வை வெளியேறும் அதனால் ஆடைகள் ஈரமாகி விடும். உடற்பயிற்சி முடிந்த பிறகு குளிர்ச்சியாக இருப்பதாக நினைத்து அந்த உடைகளை மாற்றாமல் அப்படியே அடுத்த வேலை செய்ய தொடங்குகின்றனர். இதனால் சில சரும பிரச்சனைகளை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது முற்றிலும் தவறு. உடற்பயிற்சி முடிந்த ஆடைகளை மாற்றி கொள்வது நல்லது.