செல்லப் பிராணிகள் நமது வாழ்வில் கொண்டுவரும் இன்பம் அளவிட முடியாதது. இழப்புகளை சந்தித்த பலரது வாழ்க்கையிலும் நம்பிக்கையும் ஆறுதலும் கொண்டு வந்தது இந்த மிருகங்களாகத் தான் இருக்கும். இந்த மகிழ்வைக் கொண்டாடும் நினைவாகத் தான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 செல்லப் பிராணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் என்னென்ன செயல்பாடுகள், பரிசுகள் நமது செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கலாம்?



  1. ஒளிந்து விளையாடுவது


ஆச்சரியமூட்டும் வகையில், இந்த விளையாட்டு உங்கள் செல்லப் பிராணிகளுக்கு அவ்வளவு பிடிக்கும். அவர்களது பிடித்தமான தின்பண்டங்களை வீட்டில் அங்கங்கு ஒளித்து வைத்து அவற்றைக் கண்டுபிடிக்க சொல்லலாம். அவ்வளவு மகிழ்வும் உற்சாகமும் உங்கள் செல்லப் பிராணிகளுக்குக் கிடைக்கும்.



  1. அரவணைப்பும் தொடுதலும்


உங்கள் செல்லப் பிராணிகளைக் கொஞ்ச நாள் எதுவும் புதிதாகத் தேவையில்லை. ஆனால், உங்கள் அருகாமையும், தொடுதலும் மகிழ்ச்சி மற்றும் அன்புக்கான ஹார்மோனை செல்லப் பிராணிகளிடம் உற்பத்தி செய்யும்.



  1. நடைபயணங்கள்


அடிப்படையில் உங்கள் விலங்கு, ஒரு விலங்கு. நிலமும், வெட்டவெளியும் அவற்றுக்கு அடிப்படை. ஆதலால், முடியும் போதெல்லாம் ஒரு நீண்ட நடை பயணத்திற்கு உங்கள் செல்லப் பிராணியை அழைத்து செல்லலாம், ஓடி விளையாட அனுமதிக்கலாம்.




  1. பயணங்கள்


வீட்டுக்குள் முடங்கி இருப்பது மனிதர்களைப் போல அவற்றுக்கும் ஒரு சிறை தான். புதிய நிலப்பரப்பும் பயணமும் உங்களுக்கு எவ்வளவு உவப்பானதாக இருக்கிறதோ, அதை விட அதிக அளவு விலங்குகளுக்கு பிரத்தியேகமான மகிழ்வைத் தரும். ஆகவே முடிந்தால், உங்கள் செல்லப் பிராணிகளைப் பயணங்களின் போது உடன் அழைத்துச் செல்லுங்கள்.



  1. ஓட்டம்


உங்கள் செல்லப் பிராணியின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவற்றுடன் ஓடுங்கள். இது நிச்சயம் கடினமானது தான். ஆனால், உங்கள் ஓட்டத்தின் வேகத்திற்கு அவற்றை வழக்கப்படுத்தும்போது, உங்களுடன் சேர்ந்து ஓடுவது உங்களுடனான அவற்றின் பந்தத்தை அதிகரிக்கும்.   


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்