மெட்டபாலிஸம் என்னும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துங்கள் என்பதுதான் இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. அதனை ஒரே நாளில் அதிகரிக்க முடியாது. சில பழக்கத்தை தவறாமல் வழக்கப்படுத்திகொண்டால் மட்டுமே மெட்டபாலிஸத்தை அதிகரிக்க முடியும்.  உடல் எடை குறைப்பது,  உடலுக்கு தேவையான ஆற்றலை எடுப்பது போன்றவைதான் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  அந்த வகையில் நீங்கள் தினமும்  காலையில் பின்பற்ற வேண்டிய கட்டாய வழிமுறைகளை கீழே தொகுத்துள்ளோம்.


1. காலை உணவு


உடல் ஆரோக்யத்தில் காலை உணவு முக்கிய பங்காற்றுகிறது. அவசர அவசரமாக  வேலைக்கு செல்வது. காலை உணவுகளை தவிர்க்கவேண்டிய சூழலை உருவாக்குவது புரிகிறது. ஆனால் அதற்கான நேரத்தை ஒதுக்குவது அவசியம் . காலை உணவை தவிர்ப்பவராக இருந்தால் அது உங்கள் ஆரோக்யத்தில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதி நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் உங்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கிறது. உடல் எடை அதிகரிப்பதிலும் இவை முக்கிய பங்காற்றுகின்றன. அதவாது காலையில் சாப்பிடாமல்  ஸ்கிப் செய்வதால் , இரவு நேரங்களில் அதீத பசி காரணமாக சில அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். இது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உணவுகளை ஐந்து பாகங்களாக பிரித்து உண்ணுவதுதான் சிறந்தது. 




2. உடற்பயிற்சி 


தற்போது உள்ள நாகரீக உலகத்தில் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்றுதான் உடற்பயிற்சி . உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் . அது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை எப்போது சுறு சுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சியோடு கிரீன் டீ சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.  மேலும் சீரான உணவுகளை எடுத்துக்கொள்ளும் பொழுதுதான் உடற்பயிற்சி உங்களுக்கு கைக்கொடுக்கும்.தசை நாள் முழுவதும் கொழுப்பை விட அதிக கலோரிகளை எரிக்கிறது, எனவே அதிக தசைகள் ஓய்வெடுக்கும்போது கூட அதிக கலோரிகளை எரிக்க முடியும். அதற்கான தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம்.அதனை ஸ்ட்ரெச்சிங் என கூறுவார்கள்.




3.மூச்சுப்பயிற்சி:


வாகன அதிகரிப்பு , சுகாதாரமற்ற காற்று நாளுக்கு நாள் சுவாச பிரச்சனைகளை அதிகரித்து வருகிறது. அதற்கு தினமும் மூச்சு பயிற்சி அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். மூச்சு பயிற்சி வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் உங்களின் மன அழுத்த பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. காலை உணவுக்குப் பிறகு அல்லது உடற்பயிற்சி செய்த பிறகு இதைச் செய்யலாம். மூச்சு பயிற்சி செய்யும் பொழுது 5 விநாடிகள் மூச்சை உள்ளிழுத்து, 6 வினாடிகள் வைத்திருங்கள் மற்றும் 7 விநாடிகள் மூச்சை வெளியேற்றவும்.இதே போல 10 முறை செய்யதால் பலன் கிடைக்கும்.