காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மணிஷங்கர் அய்யர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நான்கு மாநில ட்விட்டர் பக்கத்தில் மணிஷங்கர் அய்யர் புகைப்படம் நேற்று இரவு திடீரென பகிரப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் டுவிட்டர் பக்கம், தெலுங்கானா காங்கிரஸ், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் டுவிட்டர் பக்கம், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ட்விட்டர் பக்கம் என்று நான்கு மாநிலங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் மணிசங்கர் அய்யர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
இந்த புகைப்படத்தின் கீழ் எந்த படக்குறிப்பும், விளக்கமும் நான்கு மாநில காங்கிரஸ் சார்பிலும் எழுதப்படவில்லை. எந்தவித பட விளக்கமும் இல்லாமல் திடீரென பகிரப்பட்ட மணிசங்கர் அய்யர் புகைப்படத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் குழப்பம் ஏற்பட்டது. மேலும், இதனால் நெட்டிசன்களும் காரணம் தெரியாமல் குழம்பினர்.
தற்போது 80 வயதான மணிஷங்கர் அய்யர் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் பிறந்தவர். குடியுரிமை பணியில் தேர்ச்சி பெற்று மணிசங்கர் அய்யர் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். பின்னர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக 1991, 1999 மற்றும் 2004ம் ஆண்டு மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2016ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்