காட்டின் ராஜா சிங்கம்தான். இது அனைவரும் அறிந்ததுதான். யானைகளின் வாழ்வியலுக்கும், இருத்தலுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவை சிங்கங்கள் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
என்ன சூழல் என்றாலும் சிங்கங்கள் யானைகளைத் தாக்கும். யானையை வீழ்த்தும் வேட்டையாடும் சக்தி வாய்ந்த ஒரே விலங்கு சிங்கம் மட்டுமே என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். யானையை வேட்டியாடினால், சிங்கத்திற்கு பல நாட்களுக்கு உணவுத் தேடும் தேவை இருக்காது. ஆனாலும், பெரிய உருவம் கொண்ட யானையை வீழ்த்துவது சிங்கத்திற்கு எளிதானது அல்ல. இதனால், சிங்கங்கள் பெருமையோடு தங்கள் மாண்போடு யானையை வேட்டையாடும்.
குட்டி யானை ஒன்று சிங்கக் கூட்டம் மொத்தமாக தாக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.
வீடியோவில், ஆற்றங்கரையில் யானை ஒன்று சிங்கங்களால் தாக்கப்படுகிறது. ஒரு சிங்கம் யானையின் முதுகில் குதித்து கடிக்கிறது. சில சிங்கங்கள் எல்லா திசைகளில் இருந்தும் விடாமல் தாக்குகிறது. யானை சுற்றி சுற்றி தண்ணீருக்குள் செல்கிறது. ’இன்று நல்ல வேட்டை என்று எண்ணிய சிங்கங்கள் உற்சாகத்துடன் யானையை தொடர்ந்து தாக்குகிறது. யானை தனியாக சிங்களை விரட்டி அடிக்கிறது.
இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு டிவிட்டர் பயனர் .” உருவத்தில் எதுவும் இல்லை. யார் சிறப்பான குணங்கள் மற்றும் தலைமை பண்புகளுடன் இருக்கிறார்களோ அவர்களே காட்டின் ராஜா. இந்த வீடியோவில் யானை தனி ஆளாய் சிங்கக் கூட்டத்தை விரட்டி அடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதுவே வீரம். யானை எந்த விலங்கிற்கும் தலை வணங்காது. அதை தான் இந்த வீடியோ சொல்கிறது.
இந்த வீடியோ இண்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் வாசிக்க-IND vs PAK Asia Cup 2022 LIVE: பாகிஸ்தானை பழிதீர்க்குமா இந்தியா..? ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பு..!
மேலும் வாசிக்க-IND vs PAK Asia Cup 2022 : இந்தியா - பாகிஸ்தான் மோதும் துபாய் மைதானம் எப்படி..? டாஸ் வெல்வது முக்கியமா..?
மேலும் வாசிக்க--Twin Towers Demolition Video: 32 மாடிகள்; நொடியில் நொறுங்கிய நொய்டா இரட்டை கட்டடங்களின் வீடியோ...