ஆசிய கோப்பை கிரிக்கெட்டியில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் மாலை 7 மணியளவில் போட உள்ளது. டாஸ் போட்ட பிறகு 7.30 மணியளவில் போட்டி தொடங்க உள்ளது.
கடந்த உலககோப்பை டி20 போட்டிக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டதால் தொலைக்காட்சிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.
7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்போர்ட்ஸ் செலக்ட் எச்.டி. ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது. இது மட்டுமின்றி ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நேரலை செய்யப்பட உள்ளது. போட்டி நடைபெறும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வந்துவிட்டன. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.
போட்டி நடைபெறும் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதனால், இரு நாட்டு அணிகளையும் உற்சாகப்படுத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களும் இந்திய மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடியுடன் மைதானத்தைச் சூழ்ந்துள்ளனர். இன்று நடைபெறும் போட்டியை ஹாட்ஸ்டாரில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பையில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இதுவரை 14 போட்டிகளில் 14 போட்டிகளில் மோதியுள்ளது. இதில், இந்திய அணி 8 போட்டியிலும், பாகிஸ்தான் அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க : IND vs PAK Asia Cup 2022 LIVE: பாகிஸ்தானை பழிதீர்க்குமா இந்தியா..? ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பு..!
மேலும் படிக்க : IND vs PAK Asia Cup 2022 : இந்தியா - பாகிஸ்தான் மோதும் துபாய் மைதானம் எப்படி..? டாஸ் வெல்வது முக்கியமா..?