சமீப காலமாக இந்திய மக்கள் வீகன் உணவுப் பழக்கத்திற்கும் சைவ உணவுப் பயன்பாடிற்கும் மாறி வருவது அதிகரித்து வருகிறது. ஆரோக்கியக் காரணிகளுக்காகவும் சூழலின் மீது கொண்ட அக்கறை காரணமாகவும் இந்த மாற்றம் நடந்து வருகிறது.


2019-இல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, கிட்டத்தட்ட 69% இந்தியர்கள் சைவ உணவுப் பயன்பாட்டிற்கு மாறி விட்டனர். மேலும் நீரிழிவு 1 & 2 நோயை சமாளிக்க, அதன் விளைவுகளைக் குறைக்க சில நேரங்களில் இந்த உடலை நீரிழிவு நோயின் கட்டுக்குள் இருந்து விடுவிக்கவும் இந்த உணவுத் திட்டம் உதவுகிறது.



அதிகமாக மாவுச் சத்து இல்லாத உணவுகள் வீகன் உணவுத் திட்டத்தில் பெருமளவு இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. காய்கறிகள், பழங்கள், விதைகள், கொட்டைகள், பயறு வகைகள் குறைந்த அளவே கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் இது நிகழ்கிறது. மேலும் இந்த வகையான உணவுகள் குடலில் இருக்கும் நுண்ணுயிரிகள் க்ளுகோசை உறிஞ்சிக் கொள்ளும் விகிதத்தைக் குறைக்கின்றன.


வீகன் உணவுத் திட்டம் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உடலின் ஜீரண செயல்பாட்டிற்கு உதவவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் செய்கிறது. ஆனால், இது செடிகளின் அடிப்படையில் அமைந்த உணவாக இருப்பதால் சரிவிகித ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


எந்தெந்த வீகன் உணவுகளின் மூலம் எந்தெந்த சத்துகள் கிடைக்கும்?


புரதச் சத்து



  • பயறுகள், பீன்ஸ்

  • விதைகள், கொட்டைகள்

  • சோயா

  • க்வினோவா

  • செடிகளில் இருந்து கிடைக்கும் பால்


சுண்ணாம்புச் சத்து



  • ஆரஞ்சு

  • பாதாம்பருப்பு

  • கொண்டைக்கடலை

  • சிவப்பு கிட்னி பீன்ஸ்

  • தஹினி


வைட்டமின் பி12



  • ஈஸ்ட்

  • காளான்கள்

  • கடல் தாவரங்கள்


இவற்றைத் தாண்டி ஒமேகா ஃபேட்டி ஆசிட், ஐயோடின், இரும்புச் சத்து, ஸின்க் முதலிய சத்துகளையும் உடம்பு பெறுவதை உறுதி செய்ய வேண்டும். சரியான அளவு காய்கறிகள், பழங்கள், விதைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இவற்றை அடைய முடியும்.


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்