தென்னிந்திய உணவு என்றவுடன் நமது நினைவிற்கு வருவது இட்லி, தோசை, சட்னி, சாம்பார் தான். அதில் இட்லியில் ஒரு சில வகைகள் இருந்தாலும் அதிக வகைகளை கொண்ட தென்னிந்திய உணவு தோசை தான். சாதா தோசை, மசாலா தோசை, நெய் ரோஸ்ட், பேப்பர் ரோஸ்ட் என தோசை வகைகளை அடிக்கி கொண்டே போகலாம். இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு வகை தோசை இணைந்துள்ளது. அந்தவகையில் தற்போது தில்குஷ் என்ற பெயரில் புதுவகை தோசை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தத் தோசை தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தில்குஷ் தோசை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 59 விநாடிகள் நிறைந்த இந்த வீடியோவில் தோசை மாவு உடன் சீஸ், பன்னீர், செரி பழங்கள், உளர்ந்த திராட்சை, பாதம் பருப்பு, முந்திரி மற்றும் சில காய்கறிகள் ஆகியவை சேர்த்து ஒருவர் தோசை ஒன்று சூடுகிறார். அதன்பின்னர் இந்த பொருட்களுடன் கரம் மசாலா உள்ளிட்டவற்றை சேர்த்து ஒரு நல்ல சுவையான தோசையாக மாற்றுகிறார். இறுதியில் அந்த தோசையை சிறப்பாக சிறிய துண்டுகளாக வெட்டி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார். 


 






இந்த தோசை சுடும் வீடியோவை தற்போதுவரை 1.5 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் இந்த தோசையின் செய்முறையை பார்த்து தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.  வட இந்தியர்களுக்கு பொதுவாக தென்னிந்திய உணவாக தோசை, வடை மற்றும் சம்பார் மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று. அதன் காரணமாகவே இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. மேலும் இந்தக் கடை எங்கே இருக்கிறது என்று பலரும் முழு விவரங்களை கேட்டு தங்களை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


 






 






 






 


மேலும் படிக்க: இதய நோய் வராமல் இருக்க இதை சாப்பிடலாம்: ஆய்வு முடிகள் சொல்வது என்ன?