சட்னி என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. இட்லி மற்றும் தோசையுடன் வைத்து சாப்பிட சில நிமிடங்களிலேயே ஈசியான முறையில் நாம் சுவையான சட்னியை தயாரித்து விட முடியும். தேங்காய், தக்காளி, வெங்காயம், புடலங்காய், முள்ளங்கி , வேர்கடலை என பல வகை சட்னிகளை நாம் செய்திருப்போம்.
தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து சட்னி செய்ததுண்டா? தக்காளியின் புளிப்பு சுவை பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும். சமையலின் சுவையை மேம்படுத்துவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. குடைமிளகாயும் மிதமான காரத்துடன் அதற்கேற்ற ஒரு நல்ல பிளேவரில் இருக்கும் இவை இரண்டும் சேரும் போது ஒரு ருசியான பிளேவர் கிடைக்கும். தற்போது தக்காளி மற்றும் குடைமிளகாயை கொண்டு ஈசியான முறையில் சுவையான சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குடை மிளகாய்-1
தக்காளி -4
முழு பூண்டு -1
பச்சை மிளகாய் -2
செய்முறை
முதலில், மூன்று முழு தக்காளிகளை கழுவி, அவற்றை மிதமான தீயில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து முழு கேப்சிகம் மற்றும் முழு பூண்டை சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், சிறிது பச்சை மிளகாயை சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து பொருட்களும் குளிர்ந்தவுடன், அவற்றின் தோலை உரிக்கவும்.
தக்காளியை மசித்துக் கொள்ள வேண்டும். குடமிளகாயின் விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து, வறுத்த சீரகத் தூள், சுவைக்கு ஏற்றவாறு உப்பு, சிவப்பு மிளகாய் தூள் (விரும்பினால்) மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும் . இவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த சட்னியுடன் கடுகு தாளித்து சேர்க்கவும். இந்த சட்னியை சூடான இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க