புளியில் வண்டு வராமல் இருக்க


புளியை நீண்ட நாட்களுக்கு ஸ்டோர் செய்து வைக்கும் போது அதில் வண்டு வந்து விடும். புளியை பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைக்க கூடாது.  கண்ணாடி அல்லது மண் பானையில் புளியை ஸ்டோர் செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளவும். அதன் அடியில் ஒரு ஸ்பூன் கல் உப்பை தூவிக் கொள்ள வேண்டும் அதன் மீது ஒரு அடுக்கு புளியை வைத்துக் கொள்ளவும். அதன் மேல் ஒரு ஸ்பூன் கல் உப்பை தூவிக் கொள்ளவும். இதன் மீது ஒரு அடுக்கு புளியை வைக்கவும். இப்படி புளியின் ஒவ்வொரு அடுக்கின் மீதும் கல் உப்பை தூவிக் கொள்ள வேண்டும். பின் இதை மூடி கொண்டு டைட்டாக மூடிக் கொள்ள வேண்டும். 


இட்லி மிருதுவாக வர டிப்ஸ்


இட்லி மிருதுவாக வர இட்லி மாவில் இரண்டு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய்யை சேர்ந்து கரண்டியால் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதி வந்ததும், இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவு ஊற்றி வைத்து அவித்து எடுக்கவும். இந்த மாதிரி இட்லியை அவித்தால், இட்லி மிருதுவாக புஸ் புஸ்வென வரும். 


திராட்சையை கழுவும் முறை


திராட்சையை பூச்சி தொல்லையால் பாதிக்கப்படாமல் இருக்க, அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து திராட்சை பழத்தின் மீது அடிக்கப்பட்டிருக்கும். இதை சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், மேலும் தொண்டையில் தொற்று ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க. திராட்சையை சாப்பிடுவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் சேர்த்து திராட்சை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதில் பாதி எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டு அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். இதை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின் இதை நன்றாக கழுவி எடுத்து பின் தண்ணீரில் மீண்டும் கழுவ வேண்டும். இப்படி கழுவி திராட்சையை சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்கும். 


மேலும் படிக்க 


Sleep Tips: சரியா தூங்கலயா? தூக்கம் இல்லாட்டினா இவ்ளோ பாதிப்புகளா?


Kothumai Appam: சுவையான கோதுமை அப்பம்... இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...