மல்லிகைப்பூ ஒரு வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க


மல்லிகைப்பூவை நாம் அதிகமாக வாங்கி விட்டால் அதை, ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்போம். ஆனால் அது இரண்டு நாட்களிலேயே மஞ்சள் நிறத்தில் மாறி விடும். இப்படி மல்லிகைப்பூ நிறம் மாறாமல் இருக்க, அதை ஒரு எவர் சில்வர் டிஃபின் பாக்சில் வைத்து மூடி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரத்திற்கு நிறம் மாறாமல் இருக்கும். 


பருப்பில் வண்டு வராமல் இருக்க


நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்புகளை இரண்டு மூன்று வாரத்திற்கு மேல் வைத்தால் அதில் வண்டு வந்து விடும். இப்படி நாம் வீட்டில் ஸ்டோர் செய்து வைக்கும் பருப்புகளில் வண்டு வராமல் இருக்க அதில் நல்லெண்ணெய் சேர்த்து வைக்கலாம். அரை கிலோ பருப்பிற்கு கால் டீ ஸ்பூன் நல்லெண்ணெய்யை சேர்த்து கலந்து வைக்கலாம். நல்லெண்ணெய் அனைத்து பருப்புகளிலும் பட வேண்டும். அதற்கு பருப்பு உள்ள டப்பாவில் நல்லெண்ணெய் துளிகளை சேர்த்து டப்பாவை மூடி நன்கு குலுக்கு விட வேண்டும். இப்படி வைத்தால் நீண்ட நாட்களுக்கு பருப்பில் வண்டு வராமல் இருக்கும். 


காய்கறி வெட்டும் மரப்பலகையை சுத்தம் செய்ய


நம் வீட்டில் காய்கறி நறுக்க மரப்பலகையை பயன்படுத்துவோம். இந்த பலகையில் இரண்டு, மூன்று வாரங்களில் ஆங்காங்கே கருப்பு, கருப்பாக பூஞ்சை வந்து விடும். இதை எளிதில் போக்கி விடலாம், அந்த பலகை முழுவதும் தூள் உப்பை தூவி விட்டு, வெட்டிய பாதி எலுமிச்சைப் பழத்தைக் கொண்டு பலகையை நன்றாக தேய்த்து விடவும். இதை 5 நிமிடம் அப்படியே வைத்து விடவும். பின் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் சிறிதளவு சேர்த்து, ஸ்கிரப்பர் அல்லது காம்பி நார் கொண்டு தேய்த்து விடவும். இப்போது பலகையில் இருந்த கருப்பு எல்லாம் காணாமல் போய் விடும்.


கத்திகள் புதிது போன்று மின்ன


நம் வீட்டில் உள்ள கத்திகளை கொண்டு பல்வேறு பொருட்களை பயன்படுத்துவோம். இதன் கரைகள் கத்தியிலேயே ஒட்டி இருக்கும். கத்தியில் ஆங்காங்கே கறைகளும், புள்ளிகளும் இருக்கும். இதை நீக்க சாறு பிழிந்த எலுமிச்சை தோலை எடுத்துக் கொண்டு இதில் சிறு உப்பு தூளை தொட்டு கத்தியை தேய்த்து விட்டு பின் தண்ணீரில் கழுவவும். இப்போது கத்தி பளபளவென மின்னும். 


மேலும் படிக்க 


Household Tips: உடையாமல் முட்டை வேகவைக்க! பாத்திரத்தில் ஒட்டாமல் மாவு பிசைய - வீட்டுக் குறிப்புகள்!


Health Tips: கழுத்தில் உள்ள கருமை நீங்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!