அரை லிட்டர் தண்ணீரை சூடுபடுத்தி, அதில் ஒரு டவலை நனைத்து நன்றாக தண்ணீர் இல்லாமல் பிழிந்து விட வேண்டும். இப்போது இந்த டவலை கழுத்தில் சுற்றிக் கொள்ள வேண்டும். லேசாக மசாஜ் செய்வது போல் டவலை அழுத்தி விட வேண்டும். 5 நிமிடத்திற்கு பின் கழுத்தில் இருந்து டவலை எடுத்து விட வேண்டும்.
கழுத்தின் கருமை நீங்க:
பின் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும் இவை இரண்டையும் நன்றாக கலக்கி விடவும். அதில் பாதி எலுமிச்சை பழ சாறை பிழிந்து விடவும். இதில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சையின் தோலை எடுத்து இந்த பேஸ்ட்டை தொட்டு கழுத்தில் நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். 5 நிமிடம் ஸ்கிரப் செய்த பின் ஒரு டிஷ்யூ பேப்பர் கொண்டு கழுத்தை நன்றாக துடைத்து விடவும்.
பின்னர் ஒரு தக்காளி மற்றும் ஒரு உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து அதனுடம் அறைத்து வைத்துள்ள சாறில் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் பதத்தில் குழைத்துக் கொள்ளவும். மீதி சாறை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்யவும்.
வாரம் இரு முறை:
முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் ஒரு முறை முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விட்டு டவலால் முகத்தை துடைத்துக் கொள்ளவும். இப்போது தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின், அல்லது இந்த பேஸ்ட் நன்றாக காய்ந்ததும் கழுவவும். வெறும் தண்ணீர் கொண்டு கழுவினால் போதுமானது. பின் ஒரு டவல் கொண்டு முகம் மற்றும் கழுத்தை துடைக்கவும். இதை வாரத்தில் இரு முறை செய்து வர கழுத்தில் உள்ள கருமை மறைந்து விடும்.
குறிப்பு :முகப்பரு துவாரங்கள் அதிகமாக உள்ளவர்கள் எலுமிச்சையை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க
வெள்ளை சட்டையில் உள்ள இங்க் கறை நீங்க.. ஃப்ரிட்ஜில் வாடை வராமலிருக்க டிப்ஸ்!
Mango Jam: மாழ்பழத்தில் இந்த மாதிரி ஜாம் செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்!