சாதத்தில் மிருதுவான சப்பாத்தி
வீட்டில் வெள்ளை சாதம் மீதமாகிவிட்டால் சிலருக்கு என்ன செய்வது என்றே தெரியாது. மேலும் சிலர் அதை வைத்து வற்றல் செய்வார்கள், ஆனால் அடிக்கடி வற்றல் செய்ய முடியாது அல்லவா? எனவே ஒரு சிலர் அதை வீணாக கீழே கொட்டி விடுவார்கள். இனி வெள்ளை சாதம் மீதமாகிவிட்டால் அதை கீழே கொட்ட வேண்டாம். அதை வைத்து மிருதுவான சாப்பாத்தி செய்யலாம். இரண்டு கப் சாதத்தை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
இப்போது தேவையான அளவு கோதுமை மாவை இதனுடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். இதை வழக்கம்போல் சப்பாத்தி கட்டையால் திரட்டி சப்பாத்தி சுடலாம் இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
நல்லெண்ணெய் மணம் மாறாமல் இருக்க..
நல்லெண்ணெய்யின் சுவை மற்றும் மணம் எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால் சில நாட்களில் நல்லெண்ணெய்யின் வாசம் போய்விட்டால், ஜிகிண்டு வாசம் வர ஆரம்பித்து விடும், நல்லெண்ணெய் எப்போதும் மணமாக இருக்க, நல்லெண்ணெய் பாட்டிலில் மிக சிறிய துண்டு வெல்லத்தை போட்டு வைக்க வேண்டும்.
தங்க கம்மலின் திருகாணி கழன்று விடக்கூடாது..
தங்க கம்மலின் சில திருகாணிகள் லூசாக இருக்கும். இதனால் எங்கேனும் கம்மல் தொலைந்து விட வாய்ப்புள்ளது. அதே போன்று குழந்தைகள் கம்மல் திருகாணியை அடிக்கடி கவனித்துக் கொள்ள மாட்டார்கள். திருகாணி கழன்று விடும் என்ற பயம் இருந்தால், ஒரு பூண்டு பல்லை எடுத்துக் கொள்ளவும், இப்போது திருகாணியை அந்த பூண்டினுள் நான்கு முறை குத்தி, குத்தி எடுக்க வேண்டும். இப்போது கம்மலில் திருகாணியை போட்டுக் கொண்டால் சீக்கிரம் கழன்று வராமல் இருக்கும். ஏனென்றால் பூண்டில் ஒரு விதமான பிசுபிசுப்புத்தன்மை இருக்கும். இதனால் திருகாணி சீக்கிரம் கழன்று விழாமல் இருக்கும்.
மேலும் படிக்க
ஒரு ரூபாய் செலவில்லாத சூப்பர் ஏசி! பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் இதோ!
Sprouts Palak Chilla: புரதம் நிறைந்த முளைகட்டிய பாலக்கீரை அடை - செய்வது எப்படி?
வீட்டில் எறும்பு வராமலிருக்க! தண்ணீர் கேனில் துர்நாற்றம் வீசாமல் இருக்க! இதை மட்டும் பண்ணுங்க