காலை உணவு என்பது நாளின் முதல் மற்றும் மிக முக்கியமான ஒன்று. அன்றைய நாளுக்கான ஆற்றல் நாம் சாப்பிடும் உணவில் இருந்தே கிடைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இது நாள் முழுவதும் திறம்பட செயல்படத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும். அதோடு, ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்றாலும் சரி ஆரோக்கியமானதை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.


முழு தானியங்கள், சிறு தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை காலை உணவாக சாப்பிடுவது நல்லது. அந்த வகையில், பாலக்கீரை, முளைகட்டிய பயறு வைத்து சில்லா ஊட்டச்சத்து நிறைந்தது என்று தெரிவிக்கின்றனர். சில்லா மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். ஒரு எனர்ஜெட்டிக்கான  சூடான காலை உணவுக்கு ஏற்ற ஸ்டஃப்டு ஓட்ஸ் சில்லா ரெசிபியை கீழே தந்துள்ளோம்..சில்லா பாரம்பரியமாக கடலை மாவு பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.


என்னென்ன தேவை?


கடலை மாவு - ஒரு பெரிய கப்


முளைகட்டிய பயறு - ஒரு கப்


துருவிய கேரட்- ஒரு கப்


பொடியாக நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப்


பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் 


பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2


மஞ்சள் - ஒரு டீ ஸ்பூன்


தண்ணீர் - தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


உப்பு தேவையான அளவு



செய்முறை


பச்சைப்பயறை முளைகட்டி எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முளைகட்ட்சிய பச்சைப்பயறு, பொடியாக நறுக்கிய பாலக்கீரை, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை சுடும் பதத்திற்கு தயாரிக்கவும். மாவு தயாரானதும் 5 நிமிடங்கள் கழித்து தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.


தோசை கல்லில் மிதமான தீயில் மெலிதாக இல்லாமல் அடை மாதிரி வட்டமாக வார்க்கவும். மறுபுறம் புரட்டி, இருபுறமும் வேகும் வரை அதனை நன்கு சமைக்கவும். இதோடு, வெண்ணெய், நெய், எண்ணெய் சேர்த்து வார்க்கலாம். பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் அவ்வளவுதான். ஊட்டச்சத்துமிக்க முளைகட்டிய பச்சைப்பயிறு பாலக்கீரை சில்லா ரெடி!


இதற்கு புள்ளிப்பும் காரமும் நிறைந்த தக்காளி, வெங்காயம் சட்னி, புதினா சட்னி என எதுவேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.