முகம் பார்க்கும் கண்ணாடி அழுக்கா, கரையா இருக்கா? முகம் மங்கலா தெரிகின்றதா? கவலையே வேண்டாம். இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. வீட்டில் நாம் பல் தேய்க்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை கண்ணாடியில் அப்ளை செய்ய வேண்டும். முகத்திற்கு க்ரீம் போடுவது போல், முதலில் பேஸ்ட்டை புள்ளி புள்ளியாக கண்ணாடியின் மீது வைக்க வேண்டும்.


பின் ஒரு சாஃப்ட் ஸ்கிரப்பரை எடுத்து தண்ணீரில் நனைத்து வீட்டு. கண்ணாடியை தேய்த்து துடைக்க வேண்டும். இப்போது தண்ணீரால் கழுவி கொள்ள வேண்டும். கண்ணாடி பளிச்சென மாறிவிடும். கரை அழுக்கு எல்லாம் நீங்கி முகம் க்ளீயராக தெரியும். கண்ணாடியை துடைக்க சாஃப்ட் ஸ்கிரப்பரை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் கண்ணாடியில் கீறல் விழுந்து விடும். 


ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏ.சி.:


வீட்டில் ஏசி இல்லையா? இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளதா? ஒரு ரூபாய் செலவில்லாமல் ஒரு சூப்பர் ஏசி ரெடி பண்ணலாம் வாங்க. ஒரு பாத்திரத்தில் இரண்டு கொட்டாங்குச்சிகளை போட்டு,  பாத்திரம் நிரம்ப தண்ணீர் ஊற்ற வேண்டும். இதை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஐஸ் கட்டியாக மாறி விடும். இரவில் தூங்குவதற்கு முன் இதை நம் அறையில்  பாத்திரத்துடன் வைத்து விட வேண்டும். இப்போது ஃபேனை ஆன் செய்து விட வேண்டும். காற்று ஏசி போன்று சில்லென்று வரும். ஃபேன் காற்று ஐஸ் கட்டி மீது பட்டு குளிர்ந்த காற்று வந்து கொண்டே இருக்கும். குறைந்தது 3 மணி நேரம் வரை உங்களுக்கு இந்த குளிர்ந்த காற்று கிடைக்கும்.


வீட்டில் நாம் சமைப்பதற்கு மொத்தமாக அரிசி வாங்கி ஸ்டோர் செய்து வைப்போம். அப்படி வைக்கும் போது சில நாட்களில் அந்த அரிசியில் வண்டு மற்றும் பூச்சி வந்து விடும். அப்படி அரிசியில் வண்டு, பூச்சி வராமலிருக்க ஒரு கொட்டாங்குச்சியை அரிசியில் போட்டு வைக்க வேண்டும். கொட்டாங்குச்சி அரிசியில் லேசாக புதைந்து இருக்குமாறு கொட்டாங்குச்சியை வைக்க வேண்டும். இல்லையென்றால் அரிசி ட்ரம்மில் அரிசி அளப்பதற்கு டம்ளருக்கு பதில் கொட்டாங்குச்சியை போட்டு வைக்கலாம். 


மேலும் படிக்க 


Kitchen Tips:ஃப்ரிட்ஜே இல்லாமல் காய்கறிகள் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமா? இன்னும் பல பயனுள்ள குறிப்புகள்!!


Egg Shell Tips: மிக்ஸி ஜார் சரியா அரைக்கலையா? கத்தரிக்கோல் சரியா வெட்டலையா? இதோ ஈசி டிப்ஸ்!