தண்ணீர் பாட்டிலில் துர்நாற்றம் வராமலிருக்க


நாம் தினம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலில் இருந்து சில நாட்களில் துர்நாற்றம் வர ஆரம்பித்து விடும். இதனால் அந்த பாட்டிலில் தண்ணீர் குடிக்கவே பிடிக்காது. இதை சிலர் சோப்பு தண்ணீரில் தண்ணீர் கேனை ஊற வைத்து ப்ரஷ் கொண்டு சுத்தம் செய்வார்கள். இப்படி செய்தால் தண்ணீர் கேனில் சோப்பு வாசம் வரும். மேலும் இதில் வேலையும் அதிகம்.


தண்ணீர் கேனை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். தண்ணீர் கேனில் ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் அரிசி, ஒரு துண்டு எலுமிச்சைப் பழம் சேர்க்கவும். இதிக் கால் டம்ளருக்கும் குறைவான சுடு தண்ணீர் சேர்த்து நன்கு குலுக்கி விடவும். இதில் சேர்த்திருக்கும் அரிசி ஸ்கிரப்பராக செயல்படும். எலுமிச்சை மற்றும் உப்பு அழுக்கை நீக்கும். நன்கு குலுக்கிய பின் 5 நிமிடம் ஊற வைத்து பின் நல்ல தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். இப்போது தண்ணீர் கேனில் கெட்ட வாசம் வராது. 


எறும்பு வராமலிருக்க டிப்ஸ்


வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருந்தால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி எளிமையாக எறும்பை விரட்டலாம். 6 பல் பூண்டு எடுத்து ஒரு கல் அல்லது மத்து கொண்டு நசுக்கி கொள்ள வேண்டும். பின் இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை எறும்புகள் அதிகமாக வரும் இடங்களில் சிறிது சிறிதாக தூவி விட வேண்டும். இந்த வாசனைக்கு எறும்புகள் வராது. 


கத்தி நீண்ட நாட்கள் துரு பிடிக்காமல் இருக்க


கத்திகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அவை சீக்கிரம் துரு பிடித்து விடும். அப்படி கத்தி சீக்கிரம் துரு பிடிக்காமல் இருக்க, ஒரு அலுமினியம் ஃபாயில் ஷீட்டை  எடுத்து கத்தியை நன்கு சுற்றிக் கொள்ள வேண்டும். ஐந்து முதல் ஆறு சுற்றுகள் வரை சுற்றிக் கொள்ளவும். ( கேப் இல்லாமல் நன்கு கத்தி மறையுமாறு சுற்ற வேண்டும்) இதை அப்படி உங்களுக்கு எங்கு வைக்க வேண்டுமோ அங்கே வைத்துக் கொள்ளலாம். இந்த கத்தி சுமார் ஒரு வருடம் வரையில் துரு பிடிக்காமல் இருக்கும். 


மேலும் படிக்க 


Egg Shell Tips: மிக்ஸி ஜார் சரியா அரைக்கலையா? கத்தரிக்கோல் சரியா வெட்டலையா? இதோ ஈசி டிப்ஸ்!


Kitchen Tips:ஃப்ரிட்ஜே இல்லாமல் காய்கறிகள் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமா? இன்னும் பல பயனுள்ள குறிப்புகள்!!


Instant Poha Idly: மாவு இல்லையா? இன்ஸ்டண்ட் அவல் இட்லியும், சூப்பர் சட்னியும் இப்படி செய்து அசத்துங்க!