உடலுறவில் தொடுதல் மிகவும் அவசியமானது. 'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று' என்று எழுதுகிறார் வள்ளுவர். அதில் உற்று என்பது மெய்யால் தீண்டுதல். உடலுறவை முழுமை பெறச்செய்வது அதுவே. உச்சத்தை அடையும் முன்பும் பின்பும் சில செயல்கள் உண்டு. அதுவே உச்சத்தின் போது இன்பத்தை முழுதாக அடையும் வழி. அதற்கான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
சீக்ரட் என்ன?
லீசா மங்கள்தாஸ் இன்ஸ்டாகிராமில் பேசும் விஷயங்கள் பாலியல் ஆரோக்கியம் பற்றிய குறிப்புகளின் பொக்கிஷமாக உள்ளது. சமீபத்தில் பெண்களுக்கு உச்சத்தை அடையும்போது அதிக இன்பம் பெற ஒரு உதவிக்குறிப்பை வழங்கினார். அவர் இரண்டு தூண்டுதல் நுட்பங்களைத் பற்றி பேசினார், இதனை ஒரே நேரத்தில் செய்யும் போது மேஜிக் நிகழும் என்று கூறுகிறார். லீசா மங்கல்தாஸ் கூறுவது என்னவென்றால், பெண்களுக்கு வாய்வழி உடலுறவு கொள்ளும்போது, இரண்டையும் சேர்த்து தூண்ட வேண்டும். அதாவது வாயால் வல்வாவை தூண்டும் அதே நேரத்தில் விரல்களால் யோனியில் தூண்டவேண்டும் என்று கூறுகிறார். இது பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை தரும் என்று கூறுகிறார்.
எப்படி நிகழ்கிறது இது?
இது இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும்போது அங்கு ஒரு மேஜிக் நிகழ்ந்து பெண்கள் அதிகபட்ச உச்சத்தை அடைகிறார்கள். இது எப்படி நிகழ்கிறது என்றும் அவர் விளக்குகிறார். க்ளிட்டோரஸ்-இன் உட்புற பாகங்கள் பெண்ணுறுப்பை கடந்துதான் செல்கின்றன. இது சில நேரங்களில் 'ஜி-ஸ்பாட்' என்று அழைக்கப்படும் மேல் யோனி சுவரில் ஒரு உள் ஈரோஜெனஸ் மண்டலத்தை உருவாக்குகிறது. ஈரோஜெனஸ் மண்டலம் என்பதுதான் உச்சத்தை அடைவதற்காக தீண்டப்படும் இடம். பெண்குறியில் விரல்களால் தீண்டும்போது இந்த மண்டலம் ஆக்டிவ் ஆகி விடுகிறது.
எல்லோரும் செய்யலாமா?
சுய இன்பம் என்று வரும்போது, பாலியல் இன்பத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக ஒரே நேரத்தில் கிளிட்டோரல் மற்றும் பெண்ணுறுப்பு தூண்டுதலை செய்வது வழக்கம். அதற்காக கைகள் அல்லது பொம்மைகளைப் பயன்படுத்தி சுயஇன்பம் பெறமுடியும். ஆனால் நம் துணையிடம் அதை எதிர்பார்க்கும் போது, அவர்கள் எதை விரும்புகிறார்கள் அல்லது வசதியாக இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்க வேண்டும். எல்லா மனிதர்களும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் ஜான் ஸ்னோ இல்லை அல்லவா… எனவே கேட்டுக்கொண்டு செய்வதுதான் இருவருக்குமே வசதியாக இருக்கும்.
வாய்வழி உடலுறவு பாதுகாப்பானதா?
வாய்வழி உடலுறவு பொதுவாக உடலுறவுக்கு முன் செய்யப்படுகிறது. இது பாலியல் தூண்டுதலுக்கான ஃபோர்பிளேயில் ஒரு பகுதியாக இருக்கலாம். பாதுகாப்பான உடலுறவு நடைமுறைகள் என்று வரும்போது, வாய்வழி உடலுறவின் அபாயத்தைத் தவிர்க்க இருவரும் சரியான சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். பலர் நம்பும் கட்டுக்கதைகளைப் போலல்லாமல், வாய்வழி உடலுறவு கிளமிடியா, கொனோரியா, சிபிலிஸ், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ், HPV மற்றும் எச்ஐவி (ஆபத்து மிகவும் குறைவு) போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை பரப்பலாம். இந்த அபாயத்தின் காரணமாக, 'டெண்டல் டேம்' போன்ற பாதுகாப்பைப் பயன்படுத்துவது சிறந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்